UNLEASH THE UNTOLD

Tag: vaanai alappom kadal meenai alappom

பெயரில் என்ன இருக்கிறது?

செங்கோண முக்கோணத்தின் அடிப்படையான பண்பை விளக்கும் பிதாகரஸ் தேற்றம் தெரியுமா? பொருட்களின் இயக்கம் பற்றிய நியூட்டனின் மூன்றாம் விதி? உயிரினங்களின் உருவாக்கம் பற்றிய டார்வினின் பரிணாமத் தத்துவம்? பிரபஞ்சம் எப்படி இயங்குகிறது என்பதை விளக்கும்…

மாநாட்டுப் பரிதாபங்கள்

ஆராய்ச்சி மாநாடுகள் என்பவை ஆராய்ச்சிக் கட்டுரைகளை வாசிப்பதற்கான தளங்கள் மட்டுமல்ல. தான் ஆராய்ச்சி செய்யும் அதே தலைப்பில் வேறு ஒரு கோணத்திலோ வேறு ஓர் ஊரிலோ ஆய்வு செய்பவர்களைச் சந்தித்து அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கான…

ஒலிவாங்கிகள், பின்னூட்டங்கள், ட்ரோல்கள்

அவர் பெயர் சாலி ரைட். விண்வெளிக்குச் சென்ற முதல் அமெரிக்கப் பெண்மணியான இவருக்கு 1983ஆம் ஆண்டில் இந்த வாய்ப்பு கிடைத்தது. இதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யாவின் வாலண்டினா தெரஷ்கோவா விண்வெளிக்குச் சென்றுவிட்டார், விண்வெளிக்குச்…

தாய்மை எனும் ஷ்ரோடிங்கரின் பூனை

”ஒரு தொழிலாளி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான சமூக, மரபுசார் எதிர்பார்ப்புகளும், ஒரு தாய் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான சமூக மரபுசார் எதிர்பார்ப்புகளும் அதீதமாக முரண்படுகின்றன. இந்தச் சிக்கலை ஓர் ஆண் எதிர்கொள்வதில்லை….

'பல தளங்கள் கொண்ட ஒரு மாளிகை'

“இங்கே எனக்கான கழிப்பிடம் இல்லை. இந்தக் கட்டிடத்திலேயே வேற்று நிறத்தவருக்கான கழிப்பிடங்கள் இல்லை. சற்றுத் தூரத்தில் மேற்கு வளாகத்தில் எங்களுக்கான கழிப்பிடங்கள் இருக்கின்றன, அது அரை மைல் தள்ளி இருக்கிறது. உங்களுக்கு இது தெரியுமா?…

பெண் விஞ்ஞானிகள் எப்படிப்பட்ட உடைகளை அணிவது சரியாக இருக்கும்?

ஒருவர் சிறந்த விஞ்ஞானியா இல்லையா என்பது அவர் செய்யும் வேலையைப் பொறுத்தது, உடையைப் பொறுத்தது அல்ல. ஆண் விஞ்ஞானிகள் என்று வரும்போது இந்தத் தெளிவான பார்வை இருக்கும். ஆனால், பெண் விஞ்ஞானிகளுக்கு அந்த சௌகரியம் இருப்பதில்லை. பெண்களை எல்லா இடத்திலும் பின்தொடரும் உடைப் பிரச்னை ஸ்டெம் துறையிலும் அவரைப் பாதிக்கிறது என்பதே கவலைக்குரிய நிதர்சனம். ஸ்டெம் பெண்களுக்கும் உடைக்குமான தொடர்பில் பல்வேறு இழைகள் உண்டு.

"பெண்களுக்குத் தொழில்நுட்பம் தெரியாது..."

மேனல் மற்றும் மேன்ஃபரன்ஸ் போன்றவற்றால், பெண் விஞ்ஞானிகளுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய முக்கியத்துவமும் அங்கீகாரமும் கிடைக்காமல் போய்விடுகிறது. அவர்களது சாதனைகள் வெளிச்சத்துக்கு வருவதில்லை. இதனால் துறைசார் முன்னோடிகள் என்கிற இடத்திலும், துறையின் முக்கியப் பங்களிப்பைத் தந்தவர்கள் என்கிற பட்டியலிலும் பெண்களின் பெயர்கள் அவ்வளவாக இடம்பெறுவதில்லை. காலப்போக்கில் பெண்களின் பங்களிப்பு மறைந்தே போகிறது.

களவு போகும் கனவுகள்

அறிந்துவைத்திருந்த அவரது மேற்பார்வையாளர் ஆர்தர் டீன், ஆலிஸின் ஆய்வுமுடிவுகளைத் தன் பெயரில் வெளியிட்டார். “டீன் முறை” என்கிற பெயரில் அந்தச் செயல்முறை பிரபலமாகத் தொடங்கியது. ஆலிஸின் பங்களிப்புகள் அடுத்த தொண்ணூறு ஆண்டுகளுக்கு வெளியில் தெரியவில்லை. பலரது போராட்டத்துக்குப் பிறகு ஒருவழியாக 2000ஆம் ஆண்டில் அவரது கண்டுபிடிப்பை ஹவாய் பல்கலைக்கழகம் அங்கீகரித்தது.

பணியிடம் எனும் பெருவெளி

ஸ்டெம் துறைகளில் இருக்கும் ஊதிய இடைவெளி பற்றிய தகவல்கள் அதிர்ச்சியூட்டுகின்றன. 2021இல் வெளியான ஸ்டான்ஃபோர்ட் பிசினஸ் அறிக்கையில், தொடக்கநிலையிலேயே ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபாடு இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார்கள். பொதுவாக ஸ்டெம் துறைகளில் பெண்களைவிட ஆண்களுக்கான ஊதியம் 40% அதிகமாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், பதவி உயர்விலும் பாரபட்சம் காட்டப்படுகிறது. ‘