இசை எதைத் தேர்ந்தெடுத்தாள்?
தன்னுடைய தேவை என்ன என்கிற தெளிவும் தீர்வும்தான் இலக்கே தவிர அது தான் யோசித்த வழியில் மட்டுமே இருக்க வேண்டும் என்கிற பிடிவாதம் இல்லா நெகிழ்வுத் தன்மை, எதிரில் இருப்பவரையும் சவாலுக்குள் சேர்த்துக் கொள்ளும் அறிவுத்திறன், எந்தச் சூழ்நிலையிலும் வேலையைவிடப் போவதில்லை என்கிற திட சிந்தனையும், அதை வெளிப்படுத்தத் தயங்காத திட மனதும் எல்லாம் சேர்ந்துதான் இசையின் வெற்றிக்குக் காரணம்.