குடும்பத் தலைவிகளுக்கு மாத ஊதியம்
பெண்கள் வேலைக்குப் போவது குறிப்பாக ஆசிய நாடுகளில்தாம் குறைவாக இருக்கிறது. குடும்பம், கலாச்சாரம், மதம், சமய நம்பிக்கைகள் காரணமாக இருக்கிறது. சொல்லப்போனால் பெண்களேகூட என் குழந்தையை, குடும்பத்தைக் கவனித்துக்கொள்வதில் எனக்கென்ன சிரமம், என் கடமை, பெருமை என்றெல்லாம் பேசுவதுண்டு. 16 வயதினிலே படத்தில் வரும் ஜோதிகா வேலைக்குப் போய் சம்பாதிப்பவராக இருந்தாலும்கூட கணவரும் மகளும் மதிக்காமல் இருப்பது போல காட்சிகள் இருக்கும். பல குடும்பத்தில் நடக்கும் உண்மை நிகழ்வு இது. பெண்களை சமூக ஊடகங்களிலும் வீடுகளிலும் மட்டம் தட்டிப் பேசுவதை ஆண்கள் நகைச்சுவை என்று நம்புகிறார்கள். இந்த நிலையில் வீட்டு வேலை மட்டுமே செய்யும் ஒரு பெண் சுயமரியாதையுடன் வாழ்வது என்பது ஆண்கள், பெண்களுக்கு நகைச்சுவை உணர்வுள்ளது என்று ஒப்புக்கொள்வதைப் போல குறைவான சாத்தியமுள்ள விஷயம்.