ருசிக்கும் தேயிலையின் கசக்கும் உண்மைகள்
மலைப்பகுதியை அடைந்தும் துயரம் தீரவில்லை. அட்டைக்கடி, கொசுக்கடி, தேள்கடி எனத் தொடர்ந்தது. காட்டு விலங்குகள் உயிரைப் பறித்தன. காலராவும் மலேரியாவும் அம்மையும் தாக்கின. வந்த தொழிலாளர்களில் பாதிப்பேர் மடிய, மீதிப் பேரே தேறினர். அதனால் மீண்டும் மீண்டும் தேவைக்கு அதிகமாகவே ஆட்களைச் சேகரித்தனர். பிழைப்பிற்காகக் கடல்கடந்து வந்த தமிழர்கள் பாறைகள் சூழ்ந்த அந்தக் கடினமான பகுதியைக் கனமான கருவிகள் கொண்டு உடைத்தனர். உயிரைப் பறிக்கும் அசுர உழைப்பினால் அந்த மலைப்பகுதியை விளைச்சலுக்கு ஏற்றதாக மாற்றினர். தங்களை அழைத்துவந்த ஆங்கில முதலாளிகளுக்கு விசுவாசமாக 150 ஆண்டுகள் கடுமையாக உழைத்தனர்.