மாற்றுத்திறனாளிகளை பாலின சமத்துவத்தோடு அணுகுகிறோமா?
படிக்கட்டுகள் இருக்கும் இடங்களில் எல்லாம் மாற்றுத்திறனாளிகள் செல்வதற்கான ஏதுவான சாய்தளங்கள், சக்கரநாற்காலிகள் செல்வதற்கான சூழலே இல்லாத நிலை தான். இதனால் பல மாணவிகளால் தொடர்ந்து கல்வி கற்கும் சூழல் இல்லை. அப்படியே தரைதளத்தில் வகுப்பறைகள் இருந்தாலும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதுவான கழிப்பறைகள், சோதனைக் கூடங்கள், நூலகங்கள் உள்ளிட்டவை இருப்பதில்லை. அதனால் அவர்கள் பாதியிலயே கல்வியைவிடக்கூடிய சூழல்தான் உள்ளது.