UNLEASH THE UNTOLD

Tag: periyar

பெண் ஏன் அடிமையானாள்?

தந்தை பெரியாரின் ’பெண் ஏன் அடிமையானாள்?’ என்கிற இந்தப் புத்தகத்தைப் படிக்கும் பொழுதுதான் பெண் எப்படி அடிமையாக்கப்பட்டாள் என்பது புரிகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட புத்தகம் ’பெண் ஏன் அடிமையானாள்?’ இன்று வரை அந்தப் புத்தகத்தைப் பற்றிப் பேசிக் கொண்டு இருக்கிறோம், அந்தப் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறோம். ஒரு தரப்பினர் எப்படி அன்று எதிர்தார்களோ அப்படியே இன்றும் எதிர்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.

ஆண்மை அழியட்டும்

அறிவு என்பதையும் வீரம் என்பதையும் ஆண்களுக்கான குணங்களாகவே இச்சமூகம் எப்போதும் கட்டமைத்திருக்கிறது. அதனால்தான் ஆண்மை அழியட்டும் என்றார் பெரியார். சமதர்மமும் சமத்துவமும் ஓங்க வேண்டுமென்றால், பாலின பாகுபாடு மாற வேண்டுமென்றால், ஆண்மை என்ற அதிகாரம் அழியத்தான் வேண்டும்.

இன்றும் பெண்களுக்குப் பெரியார் தேவைப்படுகிறார்...

ஜாதிப்பெருமை, மதப்பெருமை, இனப்பெருமை, குடும்ப கவுரவம், ஊர் கவுரவம், நாட்டு கவுரவம் என்று எல்லா வெற்றுப் பெருமைகளும் பெண்ணின் கர்ப்பையில் தான் குடியிருக்கின்றன.

பெரியாரும் தேவதாசி ஒழிப்புச் சட்டமும்

இந்து சமூகத்தில் கடவுள் பேரால் மதத்தின் பேரால் விபசாரிகளை ஏற்படுத்த வேண்டும் என்று எந்த சமூகத்தாரோ, தேசத்தாரோ கருதுவார்களானால், அவர்களைப் போல் காட்டுமிராண்டிகளோ, கெட்டவர்களோ இருக்கவே முடியாது. மற்றபடி எந்த சமூகமாவது இம்மாதிரியான தொழில் தங்கள் வகுப்புக்கு இருக்க வேண்டுமென்று கேட்பார்களேயானால், அவர்களைப் போல் சுயமரியாதையற்றவர்களும் இழிகுலமக்களும் வேறு யாரும் இருக்க முடியாது.