இன்றும் வாழும் தாய்வழிச் சமூகங்கள்
தாய்வழிச் சமூகங்களில் காணப்படும் குடும்ப அமைப்பு, கூட்டு குடும்பக் கூறுகளுடன்தான் இயங்குகிறது. தனிக்குடும்ப அமைப்பின் அலகுகள் அதில் இல்லை. ஒற்றைப் பெற்றோர் குடும்பங்களின் சிக்கலும் அவற்றுக்கு இல்லை. இதனால் குழந்தை வளர்ப்பு யாருக்கும் கடினமாக அமைவதில்லை.