இணையத்தின் கதை
அமெரிக்க ராணுவத்துக்காக ஆரம்பிக்கப்பட்ட கண்டுபிடிப்பு மக்கள் கைகளுக்கு வந்தது 90களில். இதுவரை நடந்தது எல்லாமே பாதை அமைக்கும் வேலைகள்தாம். இந்தப் பாதையில் செல்வதற்கான கார்கள்தான் வலைத்தளங்கள். 89இல் இங்கிலாந்தைச் சேர்ந்த டிம் பெர்னர்ஸ் லீ தகவல்களின் வலை (web of information) எனும் யோசனையை முன்வைத்தார். ஹைப்பர் டெக்ஸ்ட் மார்க்அப் லேங்குவேஜில் (HTML) எழுதப்பட்ட இவருடைய ஆவணங்கள் ஹைப்பர்லிங்க் மூலம் ஒரு பக்கம் மற்றொரு பக்கத்துடன் இணைந்திருந்தது. இந்தப் பக்கங்களை அறிய யுஆர்எல் (URL – Uniform Resource Locator) பயன்படுத்தப்பட்டது. இதை எளிமையாகப் படிக்க ஒரு ப்ரவுஸரையும் உருவாக்கினார். இந்த ப்ரஸருக்கு அவர் வைத்த பெயர்தான் வேர்ல்ட்வைட்வெப்.