இதய கீதம்
நாட்டின் அமைச்சராக இருப்பவர் M G சக்கரபாணி. அவர், சகோதரர்கள் இருவரையும் முதலில் பிரிக்க வேண்டும்; பின் நாட்டைத் தனதாக்கிக் கொள்ள வேண்டும்’ என நினைக்கிறார். இதனால், போர்க்களத்தில் இருந்து வரும் பிரதாபன் மற்றும் தாரா இருவருக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என ஆலோசனை சொல்கிறார். குடும்பத்தில் அனைவரும் ஏற்கின்றனர். தாரா ஒன்றும் சொல்ல முடியாமல் அழுகிறார். இவர்தான் உன் அண்ணி என சொல்லும்போது, ஜீவனும் ஒன்றும் சொல்ல முடியாமல் அவ்விடத்தை விட்டு நகர்கிறார்.