வந்தியத்தேவன் வழித்தடத்தில் ஆனையிறவு
2000இல் ‘ஓயாத அலைகள் 3’ என்று பெயரிடப்பட்ட இரண்டாம் ஆனையிறவு சண்டையின் போது விடுதலைப்புலிகள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மிக நீண்டதும், கடினமானதுமான சமர் அது. 35 நாட்களுக்குப் பின் ஏப்ரல் 22 ஆம் நாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் வசமானது கோட்டை. ஆனால், இறுதி யுத்தத்தின்போது, 2009 ஜனவரி 10 ஆம் நாள் இலங்கை ராணுவம் மீண்டும் இப்படைத்தளத்தைக் கைப்பற்றியது. ஆனையிறவுக்கான ஈழப்போராட்டத்தில் ஏறத்தாழ 3000 புலிவீரர்கள் களமாடி வீரச்சாவடைந்ததாக விடுதலைப் புலிகளின் குறிப்பு கூறுகிறது. ஈழப்போராட்டத்தில் ஆனையிறவு மீட்பே மிகப்பெரிய வெற்றியாக வெளி உலகுக்குத் தோன்றியது.