விவசாயப் புரட்சிக்கு வித்திட்ட பெண்கள்!
கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக, குறிப்பிடத்தக்க புதிய பயிர்கள் எதுவும் உருவாக்கப்படவில்லை. நமது மூதாதையர்கள் காட்டுச் செடிகளிலிருந்து பயிர்களாக மாற்றிய உணவுகளைத்தாம் நாம் இன்னமும் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறோம். நமது தற்கால உணவு ஒருவகையில் பண்டைய விவசாயிகளால் வடிவமைக்கப்பட்டது” என்கிறார் மானுடவியலாளர் யுவால் நோவா ஹராரி. இவர் குறிப்பிடும் பண்டைய விவசாயிகள் பெண்கள்தாம் என்பதைப் பல ஆய்வுகள் உறுதிசெய்திருக்கின்றன.