இசையின் முரட்டுத்தனத்தால் என்ன ஆனது?
ஒரு ஞாயிற்றுக் கிழமை நிதானமாக எழுந்து வந்த இசையை, “ என்னம்மா, மாமா காபிக்காகக் காத்திருந்து அலுத்துட்டார், என்னதான் ஞாயிறு என்றாலும் எட்டு மணிக்கா எழுவது?” என்று மாமியார் கேட்டார். இன்னும் தூங்கிக்கொண்டிருக்கும் பிரபுவைப் பற்றிப் பேசவே மாட்டார்கள் எனக் கடுப்புடன் நினைத்தவாறே, “எனக்காக ஏன் காத்திருக்கணும்? நீங்க போட்டுத் தாங்க, இல்லாட்டி மாமாவே போட்டுக்கலாமே? நான் இந்த வீட்டுக்கு வர்ற்துக்கு முந்தி நீங்க காபியே குடிக்காமயா இருந்தீங்க? “ என்று குரலை உயர்த்தி கத்தினாள்.