நிராகரித்தலின் கனவு
‘நிராகரித்தலின் கனவு.’ பெண், ஆண் உறவென்பது மிகச் சிக்கலானது, மிக நுட்பமானது, மிக சுவாரசியமானது. ஒரு பெண்ணின் பேருந்துப் பயணம் குறிப்பாக இரவு நேரப் பயணம் தரும் அச்சம், அதே நேரத்தில் மழை தரும் இதம் என்று ஒவ்வொன்றையும் மொழிவழி அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளார். குழந்தையின்மை பெண்ணின் வாழ்க்கையை எவ்வாறெல்லாம் புரட்டிப் போடுகிறது என்பதை உளவியல் சார்ந்து செறிவாகப் புலப்படுத்தியுள்ளார் .