UNLEASH THE UNTOLD

Tag: திமிறி எழு

பாலுறுப்புகளைத் தீண்டா புனித கரங்கள்

ஏதோ காரணங்களால் திருமணமே ஆகாத சிலர் நம்மோடு வாழ்கிறார்கள். அது அவர்களது தெரிவு. சுதந்திரம். அந்த அடிப்படை நாகரீகம் நம் சமூகத்திடமில்லை. அவர்களைப் பற்றி முதுகுக்குப் பின்னால் உலவும் கதைகளில் அவர்கள் பாலுறவுக்குத் தகுதியற்றவர்கள் என்பது, அது ”கையடிக்கும் கேஸ்” என்று கேலி செய்வதுமெல்லாம் மிக எளிய விசயங்களாக இருப்பதைக் காணுகிறோம். கேட்கிறோம். உலகிலேயே அவர்கள் மட்டும்தான் சுய இன்பம் காணுவதுபோலவும் மற்றவர்களெல்லாம் தங்கள் பாலுறுப்புகளைத் தீண்டா புனித கரங்களைக் கொண்டவர்களைப் போலவும் பேசிக் கொண்டிருப்பார்கள்.

திமிறி எழு

ஒரு பாலியல் குற்றச்சாட்டை ஆராய்ந்து அது “ஆதாரமற்றது அல்லது பொய்” என்று முதலாளித்துவ அரச முகவர்களால் இலகுவாகக் கூறிவிட முடியும். ஆனால் ”ஆதாரமற்றது ” என்பது ”பொய்” என்ற அர்த்தமல்ல என்பதையும், இது பாலின நிலைப்பாடுகளால் பாதிக்கப்படக்கூடிய ஒரு முடிவு என்பதையும் நிரூபணம் செய்வதற்கான சந்தர்ப்பங்கள் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மறுக்கப்படுகின்றன.

திமிறி எழு

மோதல் தொடர்பான பாலியல் வன்முறை என்பது புராண காலத்தின் அட்டூழியம் என்றும், இன்றைய உயர் தொழில்நுட்ப யுகத்தில் யுத்த பேராயுதங்களில் ஒன்றாக பாலியல் இனிப் பயன்படுத்தப்படாது என்றும் கற்பிக்கப்படும் சமகாலப் போக்கும் கவனிக்கத்தக்கது. ரகசியத்தையும் களங்கத்தையும் முழுமையாக மூடி மறைப்பதற்கான ஒரு போர்வையைத் தயார் செய்யும் ஒரு உத்தி மட்டுமே இது. இது கூட்டு மனசாட்சியின் கறையைப் பிரதிபலிக்கின்றது.