கனடா எனும் கனவு தேசம்-5
வீடற்றவர்களுக்கு அரசு இலவசமாக ஷெல்ட்டர் ஹோம் கட்டி வைத்திருக்கும். இங்கே மின்சாரம் அத்தியாவசியம், இல்லாவிட்டால் கனடாவில் உயிர் வாழ முடியாது.
வீடற்றவர்களுக்கு அரசு இலவசமாக ஷெல்ட்டர் ஹோம் கட்டி வைத்திருக்கும். இங்கே மின்சாரம் அத்தியாவசியம், இல்லாவிட்டால் கனடாவில் உயிர் வாழ முடியாது.
“கனடாவில் இயற்கையால் விளையும் அசெளகரியத்தைப் பொறுத்துக்கொள்ளவும் ரசிக்கவும் நம்மால் முடியும் என்பதுதான் உண்மை.”
எவ்வளவு வாடகை கொடுத்தாலும் வீட்டிலும் பாத்ரூமிலும் தண்ணீரைத் தரையில் ஊற்ற முடியாது, கூடாது. குளிருக்காக முழுவதும் அட்டையிலேயே 50-60 தளங்களில் வீடுகளைக் கட்டி வைத்திருக்கிறார்கள். அதாவது ஒரு வீட்டின் உட்புறம் நீங்கள் பார்க்கக்கூடிய அனைத்தும், அட்டையில் தான் செய்திருப்பார்கள். அதனால் தரையில் தண்ணீர் ஊற்றினால், இந்திய மதிப்பில் 30 ஆயிரத்திற்கு பில்லை நீட்டுவார்கள்.
என்னை நம்பி திசை, வழி கேட்டவர்கள் பட்ட பாடு, அதை நீங்கள் அவர்களிடம்தான் கேட்க வேண்டும். எனக்கு அதிகம் பழக்கமான ஊரிலேயே, உறியடி விளையாட்டில் சுற்றுவது போல இரண்டு முறை சுற்றிவிட்டால் போக வேண்டிய திசை குழம்பிவிடும், கண்ணை கட்டாமலேயே.