UNLEASH THE UNTOLD

Tag: அவள் கதைகள்

இயற்கை எனும் சொர்க்கம்

மழை பிடித்தது. நிலா பிடித்தது. “நிலாச்சோறு மாற்றுதல்” என்று ஒரு விளையாட்டு 15 நாட்களுக்கு நடக்கும். வாசலில் முக்காலியில் சாணத்தால் செய்த பிள்ளையார் வைத்து, அன்று மாலை வீட்டில் சமைத்த உணவை எச்சில் படாமல் அவரவர் வீட்டில் இருந்து ஒரு பாத்திரத்தில் எடுத்து வந்து அந்த முக்காலியைச் சுற்றிலும் வைத்துக் கும்மிப் பாடல் பாடி விளையாடுவார்கள். கும்மி முடிந்து நிலவொளியில் நிலவுக்குப் படைத்த உணவைப் பகிர்ந்து உண்ணுவார்கள். அது முடிந்து தூக்கம் வரும் வரை விளையாட்டுகள் தொடரும். 15ஆவது நாள் மாவிடித்து உலக்கை வைத்து அந்த நிலாச்சோறு மாற்றும் வைபவம் முடியும்.

மோதலும் காதலும்

உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று திரும்பும் தாத்தாவின் எடையும், பாட்டியின் எடையும் சமமாகவே இருக்கும். வலியோ வேதனையோ அவர்களுக்குள்ளாகவே பகிர்ந்து கடந்து விடுவார்கள். அன்பான வார்த்தைகளால் பேசியோ, அருகருகில் அமர்ந்தோ கூட அவர்களை கீதா பார்த்ததில்லை.