பட்டாம்பூச்சி
மூர்த்தி காலையில் விட்டெறிந்து சென்றிருந்த சாப்பாடுத் தட்டிலிருந்து சிதறியிருந்த இட்லித் துண்டுகளும் சட்னிக் கோலமுமாக அறையே அலங்கோலமாகக் கிடந்தது. அதைப் பார்க்கப் பார்க்க அஞ்சனாவுக்குக் கழிவிரக்கம் பெருகியது. அப்படியே ஆணியடித்தது மாதிரி உட்கார்ந்திருந்தாள். எறும்பு…
