UNLEASH THE UNTOLD

Top Featured

பெண்களும் அரசியலும்

சமூகநீதிக்காகவும் பாலின சமத்துவத்துக்காகவும் போராடிய அம்பேத்கர் பெரியார் வழியில் பெண்கள் அரசியல்படுவது ஒன்று தான் பெண்கள் அரசியலில் வலிமையான இடங்களுக்கு முன்னேறுவதற்கும், ஒட்டு மொத்த பெண்களுக்கான விடிவு ஏற்படுவதற்கும் ஒரே வழி.

லூசி

நம் அனைவருக்கும் பொதுவான ஒரே மூதாதையர் இருந்திருக்க வாய்ப்பிருக்கிறதா? இருக்கிறது என்கிறார்கள் சிலர். அந்த முதல் மனிதன் பெண் என்பது அவர்களது வாதம். மைட்டோகாண்ட்ரியல் ஏவாள் என்று அந்த மூதாதையருக்குப் பெயரும் வைத்திருக்கிறார்கள். இவரிடமிருந்தே மனித குலம் தழைத்தது, இவரே நம் ஆதி தாய் என்று இவர்கள் அறிவித்தார்கள்.

உலகை மாற்றிய தோழிகள்

ஆண்கள் கோலோச்சிய அறிவுத்துறையில் 1,600 ஆண்டுகளுக்கு முன் ஒரு பெண், சமூகத்துக்குப் பயன்படும் பல துறைகளிலும் ஒப்பற்றவராகத் திகழ்ந்தார். ”ஹைபேஷா வாழ்ந்த காலத்தில் அவருக்கு இணையான அறிஞர்கள் யாருமே இல்லை” என்கிறார் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த சாக்ரடீஸ் ஸ்கொலாஸ்டிகஸ் என்ற வரலாற்றுப் பேராசிரியர்!

முதல் பெண்கள்

பர்தா முறையைப் பின்பற்றாமல், ஆண்களுடன் அரசவையில் வாதம்செய்து, ஆணைகள் பிறப்பித்து, சிங்கம்போல வலம் வந்தாள். படைகளை வழிநடத்தினாள். நஸ்ரியா பல்கலைக்கழகத்தில் கலை, அறிவியல், வானியல், கணிதம் என பல பிரிவுகளை நிறுவினாள். ‘வல்லமைமிக்க சுல்தான்’ என்று அச்சிடப்பட்ட செப்பு மற்றும் வெள்ளி நாணயங்களை வெளியிட்டாள்.

திமிறி எழு

நான்கு தசாப்த காலங்களுக்கும் மேலாகப் பெண்ணியவாதிகள், மார்க்சிஸ்டுகள், பிற கோட்பாட்டாளர்களின் பாலியல் வன்முறை பற்றிய கருத்துக்கள் தொடர்ந்து மாறிவந்திருக்கின்றன. எனினும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையை எந்தவொரு முறையான வழியிலும் இவர்கள் கையாளவில்லை.