அழிக்கும் மெடியா
‘என்னை அழித்தவனை நானும் அழிப்பேன்’ என்று ஓர் ஆணைப் போலவே சூளுரைக்கிறாள் மெடியா. தனக்கு இழைக்கப்பட்ட அநீதியைத் தன்னந்தனியாக எதிர்கொள்கிறாள்.
‘என்னை அழித்தவனை நானும் அழிப்பேன்’ என்று ஓர் ஆணைப் போலவே சூளுரைக்கிறாள் மெடியா. தனக்கு இழைக்கப்பட்ட அநீதியைத் தன்னந்தனியாக எதிர்கொள்கிறாள்.
‘அனைத்து ஆத்மாக்களின் இயல்பும் ஒன்றுதான். ஆத்மாக்களை ஆண்கள் என்றோ பெண்கள் என்றோ அறுதியிட்டு அழைக்க முடியாது. வேறுபாடு உடலில் மட்டுமே தோன்றுகிறது.’- ஐசிஸ்
ஒவ்வொரு சமூகமும் தங்கள் உயிர் காக்கும் உணவைப் பெண் கடவுளாக உயர்த்தியதைப் பார்க்கும்போது, தொல்லியல் ஆய்வாளர்களும் மானுடவியலாளர்களும் ஏன் விவசாயத்தைக் கண்டுபிடித்தவர்கள் பெண்கள் என்று கூறுகிறார்கள் என்பது புரியும்.
குழந்தை பிறப்பின்போது பெண்கள் நகரமுடியாத நிலையில் இருந்ததால் செடிகளின் வளர்ச்சியை நிதானமாகவும் உன்னிப்பாகவும் ஓரிடத்தில் இருந்தபடி அவர்களால் ஆராய முடிந்தது.
கடவுள் படைத்த முதல் ஆண், ஆதாம். முதல் பெண்? ஏவாள் அல்ல, லிலித். தரையில் கிடந்த தூசிகளைச் சேகரித்து ஆதாம், லிலித் இருவரையும் உருவாக்கிய கடவுள் அவர்களுக்கு சுவாசத்தை வழங்கி உயிர் வாழச் செய்தார். இருவரையும் ஒன்றாக, ஒரே விதத்தில்தான் கடவுள் படைத்தார் என்றாலும் இருவரும் சிறிது காலம்தான் ஒன்றாக வாழ்ந்தனர். நீ எனக்கு சரிசமானமான உயிர் அல்ல என்றான் ஆதாம். உண்மைதான், நான் உன்னைவிடப் புத்திசாலி என்றார் லிலித். ஆதாமால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை.
ஐந்தில் ஒரு பகுதி பணிகளை மட்டுமே ஆண்கள் மேற்கொண்டுள்ளனர். இந்த உண்மை ஆண்களுக்கும் தெரிந்திருந்தது. நம் குழுவில் உள்ள பெண்கள் நம்மைவிட மேலானவர்கள், நம்மைவிட அதிகம் உழைப்பவர்கள், நம்மைவிட அதிகத் திறமை கொண்டவர்கள் என்பதை ஒப்புக்கொள்ள அப்போதைய ஆண்களுக்கு எந்தப் பிரச்னையும் இருந்ததாகத் தெரியவில்லை. அதனால்தான் அவர்கள் லூசிக்களை அதிசயமானவர்களாக, அசாத்தியமானவர்களாகக் கண்டார்கள். ஆண்களைவிடவும், மனித குலத்தைவிடவும் மேலானவர்கள் லூசிக்கள் என்று அவர்கள் நம்பினார்கள். அதனாலேயே பெண்களைக் கடவுள்களாக அவர்கள் கண்டனர்.
நம் அனைவருக்கும் பொதுவான ஒரே மூதாதையர் இருந்திருக்க வாய்ப்பிருக்கிறதா? இருக்கிறது என்கிறார்கள் சிலர். அந்த முதல் மனிதன் பெண் என்பது அவர்களது வாதம். மைட்டோகாண்ட்ரியல் ஏவாள் என்று அந்த மூதாதையருக்குப் பெயரும் வைத்திருக்கிறார்கள். இவரிடமிருந்தே மனித குலம் தழைத்தது, இவரே நம் ஆதி தாய் என்று இவர்கள் அறிவித்தார்கள்.