சந்திரகிரி ஆற்றங்கரையில்...
எல்லோருக்கும் இடிவிழுந்தது போலாயிற்று. பேச்சே எழவில்லை. நாதிராவுக்கு நாக்கு உலர்ந்துவிட்டது. கைகால்கள் நடுங்கத் தொடங்கின. அங்கேயே ஒரு மணைப்பலகை மீது உட்கார்ந்து விட்டாள்.
எல்லோருக்கும் இடிவிழுந்தது போலாயிற்று. பேச்சே எழவில்லை. நாதிராவுக்கு நாக்கு உலர்ந்துவிட்டது. கைகால்கள் நடுங்கத் தொடங்கின. அங்கேயே ஒரு மணைப்பலகை மீது உட்கார்ந்து விட்டாள்.
நாதிரா ஓர் ஆண் குழந்தைக்குத் தாய். குழந்தைக்கு மூன்று மாதம் முடிவதற்குள்ளாகவே நாதிராவுக்குத் தாய்வீடு சோர்வு தட்டியது. கணவன் வந்துகொண்டிருந்தாலும் அரைமணி நேரத்திற்குள் புறப்பட்டுவிடுவான்.
தாய் எவ்வளவு தான் சொன்னபோதும் மணப்பெண் மிகவும் சிறியவள் என்பது அவன் மனதை அரித்துக்கொண்டே இருந்தது. தாய்க்காக அவன் திருமணத்திற்குச் சம்மதம் தந்தான்.
பல சமூகக் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்ட முஸ்லீம் பெண்களின் முகத்தோற்றத்தோடு நாதிராவும், பெண்களுக்குக் கொடுமை இழைக்கும் ஆண் முகத்தோற்றத்தோடு மஹமத்கானும் வாழ்கின்றனர்.