UNLEASH THE UNTOLD

க. சசிகலா

பண்பாட்டுக் கட்டமைப்பு எனும் பாலின ஒடுக்குமுறை

பெண்ணடிமைத் தன்மையிலிருந்து தங்களுக்கு விலக்களிப்பதற்கு உடை குறித்தான சிந்தனைத் தெளிவு வேண்டும் என்கிறார் இந்நூலாசிரியர். தனக்கான வெளியைத் தானே தேர்வுசெய்ய வேண்டும்; தனக்குப் பிடித்தமான உடையை அணிந்து தன்னம்பிக்கையுடன் கம்பீரமாக நிமிர்ந்து நடைபோட வேண்டுமென்கிறார். பெண்களின் உடலை, உடையை யாரேனும் விமரிசித்துக் குறைகூறினால், மோசமாகப் பேசினால் அது அவர்களின் அறியாமையையே வெளிக்காட்டுகிறது என்பதைப் பெண்களே புரிந்துகொள்ள வேண்டும் என்பதோடு நிறுவவும் முற்படுகிறார். பெண்களின் ஆளுமைத்திறன் பேராற்றல் மிக்கது, அதை வெளிப்படுத்துவதற்கான ஆயுதம்தான் உடல். அந்த உடலைப் பற்றி எந்தக் குற்றவுணர்வும் பெண்களுக்கு இருக்கக்கூடாது.