மண்ணும் பெண்ணும்
வரலாற்றுப் பெருமைமிக்க, பௌதீக வசீகரமிக்க, பன்முகக் கலாச்சாரம் கொண்ட ஓர் அழகிய மாங்கனி வடிவ தேசத்தை போர், தீவிரவாதம், இனக்கலவரம் எனப் பிரச்னை கொண்ட கண்ணீர்த்துளி தேசமாக மட்டுமே உலகின் கண்களுக்குக் காட்டிக்கொண்டிருக்கும் சமீபக்கால பதிவுகளிலிருந்து மாறுபட்ட, இலங்கையின் சிறப்புகள், தொன்மைகள், வாழ்வியல் முறை குறிப்பாகப் பெண்கள் குறித்து நானறிந்த, நான் உணர்ந்த சில துளிகளைப் பதிவுசெய்ய விரும்புகிறேன்.