வெறுப்பு விஷ விதைகளை ‘அன்பு’ எனும் ஆயுதத்தால் களைவோம்!
மனிதகுலம் என்று பெருமைப்பட்டுக்கொள்வதற்கு நம்மிடம் எதுவுமே இல்லை என்றே தோன்றுகிறது. உலகில் இதுவரை தோன்றிய உயிரினங்களில் அறிவார்ந்த சமூகமாக மனித இனம் அறியப்படுகிறது. ஆனால், நம் அறிவு அனைத்தையும் நமக்கெதிராகத்தான் நாம் பயன்படுத்துகிறோம் என்கிற அடிப்படை உணர்வுகூட இல்லாமல்தான் இந்த இனம் இருக்கிறது. நாம் என்றால் அது நம் மனித இனம் முழுவதையும்தான் குறிக்கும். நம்மைச் சூழ்ந்து இருக்கும் அத்தனை உயிர்களையும் நமக்கு அளிக்கப்பட்ட ஒன்றாக, நம் பயன்பாட்டுக்காக மட்டுமே படைக்கப்பட்டதாக நாம் எடுத்துக்கொள்கிறோம். இந்தச் சுயநலம், இயற்கையைச் சீண்டுவதில் தொடங்கி சக மனிதனைச் சீண்டுவதில் முடிகிறது. அனைத்து மதங்களும் ஓயாமல் போதிப்பது அன்பைத்தான்.