1. 1966-ம் ஆண்டு, பசிபிக் ஆசியப் பயண சங்க மாநாடு, புது டில்லியில் நடைபெற்றது. அதை முன்னிட்டு, ஆக்ராவில் உள்ள சிகந்திரா (Sikandra) படம் பொறித்த அஞ்சல்தலை வெளியிடப்பட்டது. இது அக்பரின் கல்லறை.

2. 1966-ம் ஆண்டு, ஜெய் ஜவான் மற்றும் போர் வீரர்கள் படம் பொறித்த அஞ்சல்தலை வெளியிடப்பட்டது. நேரு இறந்த உடனேயே, இந்தியா பாகிஸ்தானால் தாக்கப்பட்டது. அப்போது சாஸ்திரி லால் பகதூர் ஏற்படுத்திய முழக்கம் தான் இது.

3. ஜனவரி 10, 1966 அன்று, பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி இறந்ததை முன்னிட்டு, அஞ்சல்தலையை இந்தியா வெளியிட்டது. லால்பகதூர் சாஸ்திரி உத்தரப்பிரதேசத்தின் முகல்சாராயில் 1904 அக்டோபர் இரண்டாம் நாள் பிறந்தவர். காந்தியின் ஒரு உரை அவரது வாழ்க்கையை மாற்றியது. அவர் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்க முடிவு செய்தார். அவர் சாதி அமைப்பை எதிர்த்தார். சாஸ்திரி என்பது சாதிப்பெயர் அல்ல. அறிஞர் என்ற பொருளில் அவர் இவ்வாறு அழைக்கப் படுகிறார்.
நேருவின் அமைச்சரவையில் ரயில்வே மற்றும் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு அமைச்சராக இருந்தவர். நேருவின் மறைவுக்குப் பிறகு, அவர் இரண்டாவது பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1965 இல் இந்தியா பாகிஸ்தானிடமிருந்து தாக்குதலை எதிர்கொண்டது. ஐ.நா. ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிய பிறகு, போர் செப்டம்பர் 23, 1965 அன்று முடிவுக்கு வந்தது. ஜனவரி 10, 1966 அன்று சாஸ்திரியும் அவரது பாகிஸ்தான் பிரதமர் அயூப்கானும் போர் இல்லாத ஒப்பந்தத்தில் (தாஷ்கண்ட் பிரகடனம்) கையெழுத்திட்டனர். மறுநாள் அதிகாலை இரண்டு மணிக்கு, அவர் மாரடைப்பால் இறந்தார்.

4. 1966-ம் ஆண்டு, கம்பர் அஞ்சல்தலையை இந்தியா வெளியிட்டது. கம்பர் 12 ஆம் நூற்றாண்டு திருவழுந்தூர், தமிழ்நாட்டில் பிறந்த தமிழ் கவிஞர். வால்மீகி ராமாயணத்தைத் தமிழில் எழுதினார். மூலநூலின் கதையை மட்டும் எடுத்துக் கொண்டு பல்வேறு மாற்றங்களுடன் இவர் எழுதியதாகக் கருதப் படுகிறது. ராமாயணக் கவிதையின் சிறப்பைக் கொண்டு அவர் ‘கவிச் சக்கரவர்த்தி’ என்று அழைக்கப்படுகிறார்.

5. 1966-ம் ஆண்டு, அம்பேத்கரின் 75வது பிறந்தநாள் விழாவினைக் கொண்டாடும் விதமாக அஞ்சல்தலையை இந்தியா வெளியிட்டது.
பீமாராவ் அம்பேத்கர் 1891 ஏப்ரல் 14 அன்று மத்தியப் பிரதேசம் மோவ் ராணுவ கண்டோன்மென்ட்டில் ஒரு மராத்தி குடும்பத்தில் பிறந்தார். தீண்டாமை பாகுபாடு போன்றவற்றைத் தொடர்ந்து சந்தித்த பீமாராவ் ‘அம்பேத்கர்’ என்ற தனது ஆசிரியர் பெயரை இணைத்துக் கொண்டார். அம்பேத்கர், அமெரிக்க கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். இந்தியா திரும்பிய பிறகு, சாதிப் பாகுபாட்டிற்கு எதிராகப் போராடத் தொடங்கினார். இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொண்டார்.
சுதந்திர இந்தியாவின் முதல் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சரானார். டிசம்பர் 2, 1956 அன்று “புத்தர் அல்லது கார்ல் மார்க்ஸ்” (“The Buddha or Karl Marx”) ஐ எழுதி முடித்தார். டிசம்பர் 6, 1956 அன்று அவர் டெல்லியில் உள்ள தனது வீட்டில் இறந்தார். அதாவது இறப்பதற்கு நான்கு நாள்களுக்கு முன் வரை உழைத்திருக்கிறார்.

6. 1966-ம் ஆண்டு, குன்வர் சிங் அஞ்சல்தலையை இந்தியா வெளியிட்டது.
குன்வர் சிங், பீகாரில் உள்ள ஜகதீஷ்பூரின் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். 1857 ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய் புரட்சியின் போது பீகார் பகுதிக்குத் தலைமை தாங்கினார்.

7. 1966-ம் ஆண்டு, கோபால் கிருஷ்ணா கோகலே நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடும் விதமாக அஞ்சல்தலையை இந்தியா வெளியிட்டது.
கோபால் கிருஷ்ணா கோகலே மகாராஷ்டிராவின் ரத்னகிரியில் பிறந்தவர். அவர் இந்தியத் தேசிய காங்கிரஸின் முகமாக இருந்தவர். குழந்தை திருமணத்திற்கு எதிரான சமூக சீர்திருத்தத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்தைப் பாராட்டியவர். காந்தி, முகமது அலி ஜின்னா போன்ற பலருக்கும் வழிகாட்டியாக வாழ்ந்தவர்.

8. 1966-ம் ஆண்டு, ஆச்சார்யா த்விவேதி அஞ்சல்தலையை இந்தியா வெளியிட்டது.
ஆச்சார்யா பிரசாத் த்விவேதி உத்தரப் பிரதேசத்தின் தௌலத்பூரில் பிறந்தார். அவர் ஒரு பிரபலமான இந்தி எழுத்தாளர்.

9. 1966-ம் ஆண்டு, மகாராஜா ரஞ்சித் சிங் அஞ்சல்தலையை இந்தியா வெளியிட்டது.
பஞ்சாப் (பாகிஸ்தான்) மாநிலத்தின் மஜ்ஹா பகுதியில் உள்ள குஜ்ரன்வாலாவில் (Majha region of Punjab) பிறந்த சீக்கிய மன்னர். 1839 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 இல் இறந்த நேரத்தில் அவரது நான்கு மனைவிகள் மற்றும் ஏழு இணையர்கள் உடன்கட்டை ஏற்றப் பட்டிருக்கின்றனர். இந்தக் காலகட்டம் வரை கூட உடன்கட்டை ஏற்றும் நிலை உயிர்ப்புடன் இருந்திருக்கிறது என்பதை இதன் மூலம் அறியலாம்.

10. ஹோமி ஜஹாங்கீர் பாபா விமான விபத்தில் இறந்ததால் அவரின் அஞ்சல்தலையை இந்தியா, 1966 ஆம் ஆண்டு வெளியிட்டது.
பாபா 1909 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி மும்பையில் ஒரு பணக்கார பார்சி குடும்பத்தில் பிறந்தார். அவர் ‘இந்தியாவின் அணுசக்தி திட்டத்தின் தந்தை’ என்று அழைக்கப்படுகிறார்.
ஏர் இந்தியா 101 விமான விபத்தில் இறந்தார். பம்பாயிலிருந்து (இன்றைய மும்பை) டெல்லி, பெய்ரூட் மற்றும் ஜெனீவா வழியாக லண்டனுக்குச் செல்லும் திட்டமிடப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம், 1966 ஜனவரி 24, பிரான்சில் உள்ள மோன்ட் பிளாங்கில் (Mont Blanc) மோதியதில், 117 பயணிகளும் கொல்லப்பட்டனர். அவர்களுள் ஹோமி ஜஹாங்கிர் பாபாவும் ஒருவர்.

11. 1966-ம் ஆண்டு, மௌலானா அபுல் கலாம் ஆசாத் அஞ்சல்தலையை இந்தியா வெளியிட்டது.
1857-ம் ஆண்டு இந்தியச் சிப்பாய் (சிப்பாய்) கலகம் காரணமாக அபுல் கலாம் ஆசாத்தின் குடும்பம் கொல்கத்தாவிலிருந்து சவுதி அரேபியாவின் மெக்காவிற்குக் குடிபெயர்ந்தது. அங்கு அபுல் கலாம் பிறந்தார். அவருக்கு இரண்டு வயதாக இருந்தபோது, அவரது குடும்பம் பெங்காலுக்கு குடிபெயர்ந்தது.
அவர் தேசிய சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்றார். பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராக ஆசாத் என்ற பெயரில் கட்டுரைகள் எழுதினார். இந்தியா மற்றும் பாகிஸ்தானாக நாடு பிரிக்கப்படுவதை அவர் கடுமையாக எதிர்த்தார். பிரிவினை வன்முறையின் போது, பாதிக்கப்பட்ட பெங்கால், அசாம், பஞ்சாப் பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்தார்.
அவர் இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரானார். அவரது பிறந்த நாளான நவம்பர் 11, இந்தியாவில் தேசிய கல்வி நாளாகக் கொண்டாடப்படுகிறது. அவரது சுயசரிதையான “இந்தியா சுதந்திரத்தை வென்றது” (India Wins Freedom) மிகவும் புகழ் பெற்ற நூல்.

12 1966 ஆம் ஆண்டு, சுவாமி ராம தீர்த்தரின் அறுபதாவது நினைவுநாளை முன்னிட்டு, அஞ்சல்தலையை இந்தியா வெளியிட்டது.
சுவாமி ராம தீர்த்தர், இன்றைய பாகிஸ்தானின் பஞ்சாப் குஜ்ரான்வாலாவில் (Gujranwala Punjab, Pakistan) பிறந்தார். 1893 ஆம் ஆண்டு தொடங்கி, சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் சமய சொற்பொழிவுகள் ஆற்றினார். அவருக்குப் பின் அமெரிக்காவில் சமய சொற்பொழிவுகள் ஆற்றிய குறிப்பிடத்தக்கவர் சுவாமி ராம தீர்த்தர். இளம் இந்தியர்களை அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுக்கு அழைத்துச் செல்வது, இந்திய மாணவர்களுக்கு உதவித்தொகை பெற்றுத் தர உதவியது போன்றவற்றைச் செய்தார். களை நிறுவ உதவினார்.

13 1966 ஆம் ஆண்டு, இந்தியா வெளியிட்ட குழந்தைகள் நாள் அஞ்சல் தலை.

14 1966 ஆம் ஆண்டு, அலகாபாத் உயர் நீதிமன்ற நூற்றாண்டு விழா அஞ்சல் தலையை இந்தியா வெளியிட்டது.

15 1966 ஆம் ஆண்டு, சிறு குடும்பம் சீரான வாழ்வு (Family Planning) அஞ்சல் தலையை இந்தியா வெளியிட்டது.

16 1966 ஆம் ஆண்டு, ஐந்தாவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா ஹாக்கி வெற்றி பெற்றது. அதற்காக ஒரு அஞ்சல் தலையை இந்தியா வெளியிட்டது.

17 1966 ஆம் ஆண்டு, இந்தியா வெளியிட்ட இடைக்கால சிற்பம் (medieval sculpture) அஞ்சல் தலை.

தொடரும்…
படைப்பாளர்

பாரதி திலகர்
தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’, ‘சினிமாவுக்கு வாரீகளா?’ என்கிற புத்தகங்களாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறது. தற்போது ‘சினிமாவுக்கு வாரீகளா – 3’ மற்றும் ‘சாதனை படைக்கும் சாமானியர்’ என்கிற இரண்டு தொடர்களை ஹெர் ஸ்டோரீஸ் வலைத்தளத்தில் எழுதிவருகிறார்.



