1957- 59
1957ம் ஆண்டு, சிப்பாய் (வீரர்) புரட்சியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, ஜான்சியின் லட்சுமி பாய் படத்துடன் அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. இது, 1857-ம் ஆண்டு பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் நிறுவனத்தின் ஆட்சிக்கு எதிரான பெரிய கிளர்ச்சி.
பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் அதன் இந்திய மாநிலங்களைத் தத்தெடுக்கும் கொள்கையைக் கொண்டிருந்தது. அது ஜான்சியின் ஆட்சியாளர் லட்சுமிபாயின் வளர்ப்பு மகனை வாரிசாக அங்கீகரிக்க மறுத்து விட்டது. எனவே அவர் கிளர்ச்சியில் பங்கேற்றார்.
19வது அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க மாநாடு, புது தில்லி நடைபெற்றதை முன்னிட்டு, 1957ம் ஆண்டு, இந்தியா அஞ்சல்தலை வெளியிட்டது. ஹென்றி டுனான்ட் (Henri Dunant) மற்றும் மாநாட்டுச் சின்னம் பொறித்த அஞ்சல்தலை அது.
ஹென்றி டுனான்ட் செஞ்சிலுவைச் சங்கத்தின் நிறுவனர். அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்ற முதல் நபர்.
1957ம் ஆண்டு, குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டன. நவம்பர் 14 அன்று முதல் பிரதமர் நேருவின் பிறந்தநாள் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப் படுகிறது.
ஊட்டச்சத்து – Nutrition
கல்வி – Education
பொழுதுபோக்கு – Recreation
1957-ம் ஆண்டு, இந்தியப் பல்கலைக்கழகங்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டன.
சென்னைப் பல்கலைக்கழகம் – Chennai University
மும்பை பல்கலைக்கழகம் – Mumbai University
கொல்கத்தா பல்கலைக்கழகம் – Kolkata University
1957-ம் ஆண்டு, வியட்நாம் போர் உதவிக்கென, ஏற்கனவே 1956ம் ஆண்டு வெளியான வரைபட அஞ்சல் தலைகளை இந்தியா overprint செய்திருக்கிறது.
1958-ம் ஆண்டு, எஃகுத் தொழிலின் (Steel Industry) 50வது ஆண்டுவிழாவினை முன்னிட்டு, தொழிற்சாலை மற்றும் ஜாம்ஷெட்ஜி டாடா படத்துடன் இந்தியா அஞ்சல்தலை வெளியிட்டது. ஜாம்ஷெட்ஜி டாடா (Jamshedji Tata), டாடா குழுமத்தை நிறுவியவர்.
மகரிசி தோண்டு கேசவ் கார்வே (Maharshi Dr. Dhondu Keshav Karve,) அவர்களின் பிறந்த நூற்றாண்டை முன்னிட்டு, 1958-ம் ஆண்டு, அஞ்சல் தலை இந்தியா வெளியிட்டதுடன், பாரத ரத்னா விருதும் வழங்கியது.
ஏப்ரல் 18, 1858 மகாராஷ்டிர மாநிலத்தின் ரத்னகிரி மாவட்டம் முருத் என்ற சிற்றூரில் பிறந்தவர். பெண் கல்வி, கைம்பெண் மறுமணம் போன்ற பெண்களின் உரிமைக்கான போராட்டத்தில் முன்னோடியாக விளங்கினார்.
இந்திய விமானப்படையின் (Air Force) வெள்ளி விழாவினை முன்னிட்டு, இரண்டு அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டன.
1958-ம் ஆண்டு, பிபின் சந்திர பால் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
பிபின் சந்திர பால் (Bipin Chandra Pal), தற்போதைய வங்காள தேசத்தில் (Bangladesh) ஒரு கிராமத்தில் பிறந்தவர். சொல்லும் செயலும் ஒன்றாயிருக்க வேண்டுமென நினைத்தார். அவர் இரண்டு முறை திருமணம் செய்து கொண்டார். இரண்டு முறையும் அவர் கைப்பெண்ணையே மணந்தார். தேசிய மதுவிலக்கு சங்கத்தின் அழைப்பின் பேரில் அவர் நியூயார்க்கிற்குச் சென்றார். 1905-ம் ஆண்டின் வங்காளப் பிரிவினையை எதிர்த்துப் பல நிகழ்வுகளில் பங்கேற்றார்.
1958-ம் ஆண்டு, குழந்தைகள் தினம் முன்னிட்டு, குழந்தை நோயாளியுடன் செவிலியர் (Children’s Day Nurse with Child Patient), அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
1958-ம் ஆண்டு, ஜகதீஷ் சந்திரபோஸ் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. ஜகதீஷ் சந்திர போஸ் வங்காளதேசத்தின் (Bangladesh) டாக்காவில் பிறந்த அறிவியலாளர்.
புது டில்லியில் நடைபெற்ற கண்காட்சியை முன்னிட்டு, 1958ம் ஆண்டு, இந்தியா அஞ்சல்தலை வெளியிட்டது.
1959-ம் ஆண்டு, ஜம்செட்ஜி ஜெஜீபாய் (Jamsetjee Jejeebhoy) இறந்த நூற்றாண்டை முன்னிட்டு, அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
ஜம்செட்ஜி ஜெஜீபாய் (Jamsetjee Jejeebhoy) 1783ம் ஆண்டு மும்பையில் ஒரு பார்சி குடும்பத்தில் பிறந்தார்.
பள்ளிகள், மருத்துவமனைகள், தொண்டு நிறுவனங்களை நிறுவுவதன் மூலமும், பாலங்கள் கட்டுவது போன்ற பொதுப் பணிகளின் மூலமும் மக்களுக்கு உதவ அவர் தனது செல்வத்தைப் பயன்படுத்தினார்.
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (International Labour Organisation ILO) 40வது ஆண்டு விழாவினை முன்னிட்டு, ‘உழைப்பின் வெற்றி’ (The Triumph of Labour) என்ற அஞ்சல்தலை 1959-ம் ஆண்டு வெளியிடப்பட்டது.
1959-ம் ஆண்டு, குழந்தைகள் தினம் முன்னிட்டு, அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
1959 -ம் ஆண்டு, புது டில்லியில் நடைபெற்ற முதலாவது உலக விவசாய கண்காட்சியை முன்னிட்டு, அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
தொடரும்…
படைப்பாளர்

பாரதி திலகர்
தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’, ‘சினிமாவுக்கு வாரீகளா?’ என்கிற புத்தகங்களாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறது. தற்போது ‘சினிமாவுக்கு வாரீகளா – 3’ மற்றும் ‘சாதனை படைக்கும் சாமானியர்’ என்கிற இரண்டு தொடர்களை ஹெர் ஸ்டோரீஸ் வலைத்தளத்தில் எழுதிவருகிறார்.





நல்ல முயற்சி
நன்றி.