பெண்ணுடல் மீதான வன்முறை: இந்தியாவின் இருண்ட பக்கங்களின் கசக்கும் உண்மை
பாலியல் வன்முறை, அதிகார வன்முறை, பாலினஅடிப்படையில் சீண்டல், பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கடத்துதல் மட்டுமல்ல பெண்களுக்கு எதிரான குற்றங்கள். பெண்கள் நவநாகரிகமாக இருத்தலும் குற்றமாகப் பார்க்கிறது இந்தச் சமூகம். பெண்கள் இப்படிதான் இருக்க வேண்டும் என்று இந்தச் சமூகம் வரையறுத்துள்ள கோடுகளை உடைத்தெறியும் பெண்கள் மீது இந்தச் சமூகத்திற்கு வெறுப்பு ஏற்படுகிறது.