UNLEASH THE UNTOLD

Tag: stories

பொம்மி திம்மி வம்பி

மறுநாள் வம்பி அவரிடம் வந்தாள். “எசமானியம்மா, பூங்குளம் ஊரில் பயிர் விதைகள் மிகக் குறைந்த விலைக்குக் கிடைப்பதாக ஊரில் சொல்கிறார்கள். பலரும் அங்கு வண்டி கட்டிக் கொண்டு செல்கிறார்கள். நாம் சீக்கிரமே போனால் நல்ல பேரம் கிடைக்கும். வாருங்கள்“ என்று அழைத்தாள்.

பண்ணையாரும் பேராசைப்பட்டு அவளுடன் போகச் சம்மதித்தார். வம்பி தானே வண்டியை ஓட்டுவதாகச் சொல்லித் தாறுமாறாக மாடுகளை விரட்டினாள். வண்டி காடுமேடுகளில் இஷ்டத்துக்கும் ஓடிற்று. பண்ணையாருக்குக் குண்டு உடல். மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, “அடியே மெதுவாடி, மெதுவாடி” என்று கெஞ்சிக் கொண்டு குலை நடுங்க அமர்ந்திருந்தார்.

வாழ்வதற்கு நம்பிக்கை கொடுக்கும் ரேகா!

தன் தாயின் போராட்டங்களைப் பார்த்து வளர்ந்த ரேகாவுக்கு வாழ்கை கடினமாகத் தோன்றவில்லை. காரணம், இந்த வாழ்க்கைக்கு அவள் பழகியவள். அம்மா, ஆயா இருவரின் சேமிப்புத் தொகையை வைத்து குழ்ந்தைகளை வளர்த்து வருகிறாள். அம்மாவின் வேலை தனக்குக் கிடைக்கும் என்று முயற்சி செய்தபோது, திருமணம் ஆன பெண்ணுக்கு அம்மாவின் அரசு வேலை வழங்கப்பட மாட்டாது என்று யாரோ கூறியதை நம்பி, அந்த முயற்சியையும் கைவிட்டாள். வேலைக்கு எப்படி முயற்சிப்பது என்று ரேகாவுக்கு மட்டும் அல்ல, இங்கு யாருக்கும் தெரிவது இல்லை. சட்டங்கள் மாறுவதும் மாற்றப்படுவதும் இங்கு வாழும் மக்களுக்குத் தெரிவதும் இல்லை, தெரியப்படுத்துவதற்கு ஆளும் இல்லை.

மாமியார் கங்கம்மாவும் மருமகள் சுலோக்சனாவும்

கங்கம்மா, “ஏம்மா, இன்னும் எத்தனை நாளுக்கு இப்படிக் கண்ணுல தண்ணியும் கையில புள்ளையுமா இருப்ப, புருசன் செத்து ஆறுமாசம் ஆச்சு, பொழப்ப பாக்க வேண்டாமா? நா சொல்றத கேளு, உன்ன மாறிதான் எம்பொழப்பும், சின்ன வயசுல தாலி அறுத்தவ தனியா வாழ முடியாதுமா. நா ஆம்புள புள்ளைய பெத்ததால பொழச்சேன். நீ பொம்பள புள்ளைய பெத்து இருக்க, தனியா வாழ முடியாது. புள்ளைய எங்கையில குடுத்துட்டு நீ வேற கல்யாணம் பண்ணிக்கோ. நா பட்ட கஷ்டம் உனக்கு வேணாம்டியம்மா. எங்க காலம் வேற , உனக்கு வாழ வேண்டிய வயசு உன் புள்ளைய நா வளத்து ஆளக்குறேன், நீயும் என்ன மாதிரி நரக வாழ்க்க வாழாத. ஊரும் வுலகமும் பேசும், ஆனா ஒதவாது நா சொல்றத கேளும்மா” என்றார்.