மலக்குழி மரணங்கள்...
கடந்த 2022 ஆம் வருடம் ஜூலை மாதம் 19 ஆம் தேதி மழைக்கால கூட்டத் தொடரின் போது மலக்குழி சுத்தம் செய்பவர்களுக்கு நிகழும் மரணங்கள் குறித்து பாராளுமன்றத்தில் கேள்வி வைக்கப்பட்ட போது மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் வீரேந்திர குமார், ‘கடந்த 5 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் 347 மலக்குழி மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 51, தமிழ்நாட்டில் 48, டெல்லியில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரபிரதேசம், தமிழ்நாடு, டெல்லி ஆகிய 3 மாநிலங்களில் மட்டுமே 40 சதவீத மலக்குழி மரணங்கள் நிகழ்ந்துள்ளன என்கிற புள்ளிவிவரத்தைத் தெரிவித்திருக்கிறார்.