UNLEASH THE UNTOLD

Tag: obesity

XXL சைஸில் தொடரும் பிரச்னைகள் (2)

”அவளுக்கென்ன ஒரு வேலையும் செய்ய மாட்டேங்கறா. தின்னுட்டுத் தின்னுட்டுத் தூங்குறா. அப்புறம் குண்டாகாம என்ன செய்யும்?” என அலைபேசியைப் பார்த்துக்கொண்டிருக்கும் தனது மகளைப் பார்த்துப் பெண்களின் தாய்மார்கள் புலம்புவதை நீங்கள் பார்த்திருக்கலாம். எந்த வேலையும் செய்யாமல் இருப்பவர்கள்தாம் குண்டாக இருப்பதாகவும், ஓடியாடி வேலை செய்பவர்களுக்கு உடல் பருமன் ஏற்படாது எனவும் புரிந்துகொள்ளப்படுகிறது.

மெனோபாஸும் உடல் பருமனும்

மெனோபாஸ் என்பது கருமுட்டை உருவாவதை நிறுத்தக்கூடிய விஷயம். அது தவிர மேலை நாடுகளில் பெண்களின் சராசரி வயது 80 என வைத்தாலும் 50க்கும் பின் முப்பது ஆண்டுகள். அதாவது வாழ்வில் மூன்றில் ஒரு பங்குக்கு மேல் மெனோபாஸ் ஆன பின்புதான் இருக்கிறது. எனவே மெனொபாஸுக்குப் பின் உள்ள ஆரோக்கியம் மிக முக்கியமானது.