ஒவ்வொரு பள்ளியிலும் இருக்க வேண்டிய புத்தகம்!
பெண்கள் பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதில் இருக்கும் பிரச்னைகளையும் மனச்சிக்கல்களையும் அலசி உள்ளார் ஆசிரியர். சிறுநீரை அடக்குவதில் உள்ள சிக்கல்கள் தெரிந்தும் இயற்கைக்கு மாறாக இருப்பினும் அதை இயல்பாக கடந்து வந்தவர்களை என்னவென்று கூறுவது! இந்த மாதிரி நெருக்கடிகளை ஏற்றுக்கொள்வதற்குப் பெண்களை இந்தச் சமூகம் நன்றாகப் பயிற்றுவிக்கிறது. இனி வரும் தலைமுறைகள் இத்தகைய சூழ்நிலைகளை விழிப்புணர்வோடு மனச்சிக்கல்களையும் களைந்து சமுதாய மாற்றங்களுக்கு அடிக்கோலிட வேண்டும். நாங்கள் பள்ளியில் பயிலும் பொழுது a sound mind in a sound body என்று ஏட்டில் சொல்லிக் கொடுத்தார்களே ஒழிய பண்பாடு என்கிற போர்வையால் பெண்கள் விளையாடாமல் வீட்டில் அடங்கி இருக்கப் பழக்கி விட்டார்கள்.