முர்சி பெண்களுக்கு வாய் ரொம்பவே நீளம்!
முர்சி பழங்குடியினப் பெண்கள், கீழ் உதட்டில் வைக்கப்படும் களிமண் தட்டுகளுக்குப் பிரபலமானவர்கள். ஒரு பெண் 14 வயதாக இருக்கும்போது, அவளுடைய நான்கு கீழ் பற்கள் அகற்றப்படுகின்றன. மேலும் அவள் 15 வயதை அடையும் போது, அவள் கீழ் உதடு கீறப்படுகிறது. உதட்டில் வைக்கப்படும் தட்டு என்பது ஒரு பெண் பருவத்திற்குள் நுழைவதைக் குறிக்கிறது.