UNLEASH THE UNTOLD

Tag: mathematician

கேடில் விழுச்செல்வம் கல்வி

மரி-சோஃபி ஜெர்மைன் என்கிற பிரெஞ்சு கணிதவியலாளருக்குக் குழந்தைப்பருவத்திலிருந்தே கணிதத்தில் அதிகமான ஆர்வம் இருந்தது. வீட்டிலிருந்தபடியே நூல்களைப் படித்து தனது கணித அறிவுக்கு சோஃபி தீனி போட்டுக்கொண்டார். 1794இல் அவர் வசித்த ஊரில் ஒரு கல்லூரி தொடங்கப்பட்டது. பெண் என்பதால் அந்தக் கல்லூரியில் சேர சோஃபிக்கு அனுமதி கிடைக்கவில்லை. ஆனால், “யாராவது விரும்பினால் பாடக்குறிப்புகளைப் பெற்றுக்கொள்ளலாம்” என்று கல்லூரி நிர்வாகம் அறிவித்தது. பாடக்குறிப்புகளைப் படித்து தங்களுடைய கருத்துகளையும் புரிதல்களையும் பேராசிரியர்களுக்கு அனுப்பவும் அனுமதி இருந்தது.