UNLEASH THE UNTOLD

Tag: Malamma

சனாதனத்தின் எதிர்ப்புக் குரல் மாலம்மா

“இதையடுத்து ஊர்கூடி இரு குழந்தைகளையும் பொட்டுகட்டி விடுவதாக  அவர்களின் பெற்றோர் அறிவித்தனர்இதற்குப் பதிலீடாக அக்கிராமத்தின் அரசியல் பஞ்சாயத்துத் தலைவர் இருவருக்கு  தலா  ஒரு  வீடு  தருவதாகவும்  கூறியிருக்கிறார்.  இப்படியாக  அங்கிருக்கும் தலித்  பெண்குழந்தைகள்  தேவதாசிகளாக மாற்றப்படுகிறார்கள்.” 
 
‘தேவதாசி விமோசன அமைப்பு’ என்னும் தங்களது அமைப்புக்கு இந்தச் செய்தி வர, விசாரணையில் இந்த  விஷயங்கள்  எல்லாம்  தெரியவருகிறது.  மேலும் சட்ட ரீதியாக மேற்கொள்ளும் போது தேவதாசி  ஒழிப்புச்  சட்டத்தில்  என்னென்ன  குளறுபடிகள்  இருக்கிறது  என்பதும்  தெரியவருகிறது. பாதிக்கப்பட்ட   தேவதாசி  பெண்களிடம்  இது  குறித்துப்   பேசும்போது  ஒருவர் கூடத் தான் விருப்பத்துடன் வந்தேன்  எனத்  தெரிவிக்கவில்லை.  எங்களை  வலுகட்டாயமாகவே தேவதாசிகளாக  ஆக்கினார்கள் என்கிற  உண்மையைப்  பெண்கள்  போட்டுடைக்கிறார்கள்.
 
இதற்குக் காரணம் அவர்களின் குடும்பம் மட்டுமல்ல, அங்கு உள்ள பூசாரி,  கெளடர்கள் போன்ற  செல்வந்தர்கள்  அனைவருமே  குற்றவாளிகள்தாம்  என்பதைச் சட்டத்தில்  சேர்க்க வேண்டும்  என்கிற  தங்களின்  கோரிக்கையை  முன்வைத்துப்  போராடி வருகின்றனர்.
 
”46 ஆறாயிரம் தேவதாசிகள் மற்றும் அவர்களின் குடும்பம் என மொத்தம் 10 லட்சம் பேர்  உள்ளனர். இந்தப் பத்து லட்சத்தில்  உள்ள  குழந்தைகள் பள்ளிகளுக்குச் செல்லும்  போது  தீரா அவமானத்திற்கும்  தாழ்வுமனப்பான்மைக்கும் உள்ளாகிறார்கள்.  இப்படியான  இன்னலுக்கு  ஆளான  தேவதாசிகளிடமும்  அவர்களின்  குழந்தைகளிடம்,  “நீங்கள்  அவமானப்படுவதற்கோ, குற்றவுணர்ச்சிக்குள்ளாகவோ  தேவையில்லை.  உங்கள்  மீது எந்தத் தவறும் இல்லை. உங்களை இந்த  நிலைமைக்குத்  தள்ளிய  சமூகத்தின்  மீதும்,  சனாதனத்தின்  மீது  மட்டுமே  தவறே  தவிர  நீங்கள்  அல்ல” என்று  பேசிவருகிறோம்” என்றார்.