குமுதினி (1905 – 1986)
மகாத்மா காந்தியிடம் மட்டற்ற பக்தி கொண்டு சுதந்திர பாரதம் உருவாக வேண்டும் என்று அயராது உழைத்தவர்களில் குமுதினியும் ஒருவர். காந்தீயத்தை முன் வைத்து அவர் எழுதியுள்ள கதைகள் மற்றும் கட்டுரைகள் அனைத்துமே விடுதலைப் போராட்டத்தை எடுத்துக்கூறுகின்றன. இவற்றை ஒரு மணித்திரள் எனலாம். இதற்கு முக்கிய காரணம் வெறும் பேச்சு, எழுத்து என்று அவர் பின்தங்கவில்லை.