UNLEASH THE UNTOLD

Tag: honeybee

ஜெல்லி, ப்ரெட் மற்றும் பல்லாயிரம் சேவகிகள்

கூட்டுப்புழுவிலிருந்து ராணித்தேனீ வெளிவந்த உடனே, தனக்குப் போட்டியாக வேறு ராணிகள் கூட்டில் இருக்கின்றனவா என்று பார்க்கும். ராணித்தேனீக்களுக்கே உரித்தான, தனித்துவமான ஒரு ஒலியை எழுப்பும். மற்ற ராணிகள் பதில் ஒலி எழுப்ப, இது அந்த ராணிகளின் அறைக்குப் போய் சண்டை பிடிக்கும். சண்டையில் யார் வெற்றிபெறுகிறார்களோ அதுவே புதிய ராணி!