UNLEASH THE UNTOLD

Tag: மருதன்

எனவே, கடவுள் என்று அழைத்தார்கள்!

குழந்தை பிறப்பின்போது பெண்கள் நகரமுடியாத நிலையில் இருந்ததால் செடிகளின் வளர்ச்சியை நிதானமாகவும் உன்னிப்பாகவும் ஓரிடத்தில் இருந்தபடி அவர்களால் ஆராய முடிந்தது.

கடவுள் படைத்த முதல் பெண் ஏவாள் அல்ல, லிலித்!

கடவுள் படைத்த முதல் ஆண், ஆதாம். முதல் பெண்? ஏவாள் அல்ல, லிலித். தரையில் கிடந்த தூசிகளைச் சேகரித்து ஆதாம், லிலித் இருவரையும் உருவாக்கிய கடவுள் அவர்களுக்கு சுவாசத்தை வழங்கி உயிர் வாழச் செய்தார். இருவரையும் ஒன்றாக, ஒரே விதத்தில்தான் கடவுள் படைத்தார் என்றாலும் இருவரும் சிறிது காலம்தான் ஒன்றாக வாழ்ந்தனர். நீ எனக்கு சரிசமானமான உயிர் அல்ல என்றான் ஆதாம். உண்மைதான், நான் உன்னைவிடப் புத்திசாலி என்றார் லிலித். ஆதாமால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை.

லூசியின் ஆயுதம்

ஐந்தில் ஒரு பகுதி பணிகளை மட்டுமே ஆண்கள் மேற்கொண்டுள்ளனர். இந்த உண்மை ஆண்களுக்கும் தெரிந்திருந்தது. நம் குழுவில் உள்ள பெண்கள் நம்மைவிட மேலானவர்கள், நம்மைவிட அதிகம் உழைப்பவர்கள், நம்மைவிட அதிகத் திறமை கொண்டவர்கள் என்பதை ஒப்புக்கொள்ள அப்போதைய ஆண்களுக்கு எந்தப் பிரச்னையும் இருந்ததாகத் தெரியவில்லை. அதனால்தான் அவர்கள் லூசிக்களை அதிசயமானவர்களாக, அசாத்தியமானவர்களாகக் கண்டார்கள். ஆண்களைவிடவும், மனித குலத்தைவிடவும் மேலானவர்கள் லூசிக்கள் என்று அவர்கள் நம்பினார்கள். அதனாலேயே பெண்களைக் கடவுள்களாக அவர்கள் கண்டனர்.