சோலையம்மாள்
ஒருநாள் அவன் எண்ணிலிருந்து இவளுக்கு வாட்சப்பில் செய்தி வர ஆர்வமாய் திறந்து பார்த்தவளின் உடல் குலுங்கியது. அன்றொருநாள் அம்மாவின் போனில் பார்த்ததுபோலவே ஆபாசமான படங்கள். ஆனால் அன்றைய அருவருப்பு இப்போது இல்லை. வாய் தன்னிச்சையாக “ச்சீய்…” என்றாலும், அந்த வயதிற்கேயுரிய ஆர்வத்துடன் திரும்பத் திரும்பப் பார்த்தாள். இதழ்களில் அவளையுமறியாமல் புன்னகை வழிந்தது. ஒரு ஹார்ட்டின் மட்டும் அனுப்பினாள்.