வெயிலோடு வெளையாடி...
விஜய் டிவி சூப்பர் சிங்கர்ல கூட இருக்குது அஞ்சு சீசனு! ஆனா துபாயில இருக்குறது ரெண்டே சீசனு. வெய்ய்யியியில்ல்ல் ஆறு மாசம்… குளிளிர்ர்ர்ர் ஆறு மாசம்.
விஜய் டிவி சூப்பர் சிங்கர்ல கூட இருக்குது அஞ்சு சீசனு! ஆனா துபாயில இருக்குறது ரெண்டே சீசனு. வெய்ய்யியியில்ல்ல் ஆறு மாசம்… குளிளிர்ர்ர்ர் ஆறு மாசம்.
அடிமைகளின் தேசம்னே சொல்லி பழக்கப்பட்ட இந்த அரபு தேசத்தில் மால்கள் சமத்துவத்தை போதிக்கும் போதி மரங்களாவே எனக்குத் தெரிந்தது.
வேலைக்கு ஆளுங்க தேவைன்னு எல்லா நாட்டுல இருந்தும் மக்களை வரவெச்சு, “வேலை தாரோம், இடம் தாரோம், சாப்பாடு தாரோம்…ஆனா குடியுரிமை மட்டும் கேக்காதீங்க”ன்னு சொல்லி குடியமர்த்தி டெவெலப் (போட்டோஷாப் இல்ல உண்மையான டெவெலப்!) ஆகிட்டாங்க.
அமெரிக்கா மாப்பிள்ளையும், ஐரோப்பா மாப்பிளையும் கிடைக்கலேன்னா, ஏதோ ஒரு வெளிநாட்டு மாப்பிள்ளைன்னு பெத்தவங்க குடுக்குற கடைசி சாய்ஸ் துபாய் மாப்பிள்ளை.
தெருவே அமைதியா இருந்தது. நான் துபாய் போறேன்னு சொல்லி வழியனுப்ப நைட்டு ஒரு மணிக்கு எல்லாரும் முழிச்சுட்டா இருப்பாங்க?