பாமா நேர்காணல்- தலித் முரசு, 2010
தலித்திய சிந்தனை என்பது இறக்குமதி செய்யப்படுவதில்லை. நான் ஒரு தலித். அதைவிட வேறென்ன வேண்டும். நான் பிறந்ததிலிருந்து என்னோட ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒடுக்கப்பட்டுதான் வருகிறேன். நான் படித்து வேலை பார்க்கிறேன் என்பதாலேயே எனக்கு விடுதலை கிடைத்துவிடவில்லை. எல்லோரும் சமம் என்று சொல்லித்தான் நான் வளர்க்கப்பட்டிருக்கிறேன்.