குயர் கலந்துரையாடல் - மரக்கா, அக்னி ப்ரதீப்
“ஒவ்வொரு திருநங்கையின் மனநிலையும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். மாற்றிக் கொள்வது எப்படித் தவறில்லையோ அப்படியே மாற்றிக் கொள்ளாமல் இருப்பதும் தவறில்லை.”
“ஒவ்வொரு திருநங்கையின் மனநிலையும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். மாற்றிக் கொள்வது எப்படித் தவறில்லையோ அப்படியே மாற்றிக் கொள்ளாமல் இருப்பதும் தவறில்லை.”
நம் சமூகத்தில் குழந்தை பெற்றுக்கொள்வது பெரிய சாதனை போலப் பார்க்கப்படுகிறது. எனவே பெண்களுமேகூட ஒரு குழந்தை பெற்ற பிறகே இசிபி பயன்படுத்துகிறார்கள். நான் ஏற்கெனவே சாதித்துவிட்டேன். இன்னொரு முறை சாதனை செய்ய விருப்பம் இல்லை என்பதுபோல. குழந்தை பெற்றவர்களிடம் இசிபி மாத்திரை பயன்படுத்துவது பற்றிய கூச்சம் அல்லது அவமான உணர்வு இல்லை. ஆனால், முதல் குழந்தையே வேண்டாம் என்று சொல்லக் கூச்சம் வருகிறது. உடல்நலம் மற்றும் பொருளாதாரக் காரணங்களினால் மூன்றாவது வேண்டாம் என்று சொல்ல வராத தயக்கம் முதல் கருவை வேண்டாம் எனச் சொல்லும்போது வந்துவிடுகிறது.