UNLEASH THE UNTOLD

கருத்தூசி கண்ணம்மா

அன்னையர் தின வாழ்த்துகளைச் சொல்லும் முன்…

என்ன தான் குற்றவுணர்வை உண்டாக்கச் சுற்றி இருப்பவர்கள் துடித்தாலும், இந்தப் புனிதப்படுத்துதலில் சிக்கிக்கொள்ளாமல், குடும்பம் என்பது நம் ஒருவரின் பொறுப்பு மட்டுமில்லை, அந்தக் குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவரின் பொறுப்புமேதான் என்று தெளிந்து, பாலினச் சமத்துவம் தன் குடும்பத்தில் உருவாகப் போராடும் ஒவ்வோர் அம்மாவிற்கும் ’அன்னையர் தின வாழ்த்துகள்.’

எது கூட்டுக்குடும்பம்?

ஓர் ஆண், அவனது மனைவி குடும்பத்தோடு ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்தால் அவனுக்குப் பெயர் ‘வீட்டோட மாப்பிள்ளை’. ஏன் இங்கும் கூட்டுக்குடும்பமாகத் தானே இருக்கிறார்கள்? இதை மட்டும் ஏன் ஒத்துக்கொள்ள மாட்டேன் என்கிறீர்கள்? நீங்கள் சொல்கிற மாதிரி கூடி தானே இங்கேயும் வாழப் போகிறார்கள்?