சங்கரிகளுக்குக் கூடுதல் கவனம் தேவை!
பள்ளிகளில் குறிப்பாக அரசுப் பள்ளிகளில் பல நிலைகளில் சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் பயில்கின்றனர். உடல் குறைபாடுகள், உள்ளக் குறைபாடுகள், உணர்வுக் குறைபாடுகள் என மருத்துவ ரீதியாக இருபதுக்கும் மேற்பட்ட பெயர்கள் கொண்டவையாக அவை இருக்கின்றன. கல்வித் துறையில் சிறப்பாசிரியர்கள் மிகச் சிறிய எண்ணிக்கையில் நியமிக்கப்பட்டு இயங்கி வருகின்றனர்.