தாயமும், பாண்டியாட்டமும் தெரிஞ்சுக்கோங்க...
கையால் சோழிகளைக் குலுக்கிப் போட்டால், அனுபவசாலிகள், தாங்கள் விரும்பும் எண்ணைப் போட்டு விடுவார்கள். அதனால், சிறு ஓலைப் பெட்டி பயன்படுத்துவார்கள். அதற்குக் கிலுக்காம்பெட்டி (குலுக்கிப் போடுவதற்கான பெட்டி) என்று பெயர். தேவை இல்லாமல் பேசுபவர்களைச், சிரிப்பவர்களை ‘கிலுக்காம்பெட்டி’ என பெரியவர்கள் கேலியாகச் சொல்வார்கள்.