தனி மனித எதிர்காலத்தையும் நாட்டின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் பருவம்!
வளர் இளம் பருவத்தினரைக் கையாள்வது என்பது இருமுனை கத்தியைக் கையாள்வதைப் போல மிக முக்கியமானது. ஏனெனில் இப்பருவத்தில் ஏற்படும் பிரச்னைகள் பல்வேறு வடிவங்களையும் தன்மையையும் உடையது. ஆனால், இந்தப் பிரச்னைகளைச் சமாளிக்க ஒருங்கிணைந்த செயல்திறன் அவசியம்.