UNLEASH THE UNTOLD

அது ஒரு பிறை காலம்

கலியா முதல் சீனிக்கிழங்கு பதநீர் பாகு வரை

மருமக்கமார் மாமியார் வீட்டுக்கு வந்திருக்கும்போது, புதுப்பெண் மாப்பிள்ளையை அழைத்துத் திருமண விருந்து தரும்போது, விடுமுறையில் பிள்ளைகள் எல்லாம் வீட்டில் கூடியிருக்கும்போது இப்படிச் சில தருணங்களில் நெய்ச்சோறுடன் விருப்பமாகச் சமைத்துப் பரிமாறப்படும் உணவு கலியா.

சுடச்சுட நோன்புக் கஞ்சி, கண்ணாடி வளையல்கள்

கூட்டாஞ்சோறு தினத்தில் ‘தோழி போடுதல்’ என்ற இன்னொரு சுவையான நிகழ்வும் நடக்கும். பத்துப் பன்னிரண்டு வயது சிறுமிகள் இருவர் அன்று மாலை வெற்றிலை பாக்கு வாங்கி வந்து இருவரும் போட்டுக் கொள்வார்கள். பிறகு ஒருவருக்கொருவர் கைகளைப் பற்றிக்கொண்டு, ‘நம்ம ரெண்டு பேரும் இன்னையிலயிருந்து தோழிகள்’, எனச் சொல்லிக் கொள்வார்கள். அதிலிருந்து அப்படித் தோழி போட்ட இருவரும் எப்போதுமே ஒருவரையொருவர் தோழி என்றுதான் அழைத்துக் கொள்வார்களே தவிர, பெயரைச் சொல்லி அழைப்பதில்லை.

ஃபிர்னியின் இனிமை போல என் மோராத்து வாப்புமா!

இருபத்தேழாம் இரவுக்குக் கண்டிப்பாக ஜவ்வரிசிக் கஞ்சி (பாயாசம்தான், ஆனால் பசும்பாலுக்குப் பதிலாக தேங்காய்ப்பால்  சேர்த்துச் செய்வது) அல்லது ஃபிர்னி கொடுப்பார்கள்.

🌙 ✨வளர்பிறை காலம்✨🌙

இஸ்லாமிய ஆண்டின் ஒன்பதாவது மாதமான ரமலான் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் வரவேற்றுப் புனிதப் படுத்தும்  சங்கையான மாதமாகத் திகழ்கிறது.