Site icon Her Stories

ரொக்கா உலகை மாற்றினாள்

imdb

Rocca Changes The World
ROCCA ஜெர்மன் படம். பிரஷாந்தி Aunty நல்லா இருக்கு என்று ரெக்கமெண்ட் பண்ணினாங்க. படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

இந்தப் படம் எனக்குப் பிடிக்க காரணம் என்னவென்றால், ROCCA எப்பொழுதும், எது நடந்தாலும் மகிழ்ச்சியாக இருப்பாள்; அடுத்தவர்களுக்கு மகிழ்ச்சியைத்தான் கொடுப்பாள்.

பதினோரு வயது Ria Othilie Clementine Calsar Alva Kury (ROCCA), அவளுடைய அணில், அப்புறம் பாட்டியோட Hamburgல வாழ்வாள். அவளுடைய அம்மா அவள் பிறக்கும்போதே இறந்துவிட்டார். அவளுடைய அப்பா விண்வெளியில (ISS) வேலை செய்வார்.

reelgood

படத்தில் முதல்ல எடுத்தவுடனே ரொக்கா flightடை தானே ஓட்டிக்கொண்டு வருவாள். Pilot-க்கு உடம்பு சரியில்லாமல் போயிடும், அதனால இவள் ஓட்டி வருவாள். Airport வந்து டாக்ஸி எடுப்பாள். போய்க்கிட்டே இருக்கும்போது ரொக்கா திடீரென்று கத்துவாள். ஒரு அணில், வண்டிகள் வேகமாக வருகிற இடத்தில் போய்க்கொண்டு இருக்கும். அவள் கத்தின கத்துல Taxi Driver வண்டியைக் கொண்டுபோய் இடிச்சி நிறுத்திடுவாரு. இறங்கி ஓடிப்போய் ரொக்கா உயிரைப் பணயம் வைத்து அந்த அணிலைக் காப்பாற்றி விடுவாள்.

அப்ப என்ன பண்றதுனு தெரியாம driver பாட்டுக்கு கீழே இறங்கி ஃபோன் பேசுவாரு. போக்குவரத்து நெருக்கடி ஆயிரும் என்று ரொக்கா தானாகவே வண்டி எடுத்து reverse போய் properஆக நிறுத்துவாள். ரொக்கா எல்லா இடத்துக்குமே அவளோட Skater board ல்தான் போவாள். எப்பொழுதும் மகிழ்ச்சியான முகம், எல்லோர்கிட்டயும் கனிவாக மரியாதையுடன் பேசுவாள்; நடந்துகொள்வாள்.

ஒருநாள் ரொக்காவுடைய அணில், பாட்டி அறைக்கு வந்திரும். பாட்டி தூங்கிட்டு இருப்பாங்க. பாட்டி மேலயே அதுபாட்டுக்கு போய்ட்டு இருக்கும். என்னவோ ஏதோவென்று பாட்டி பயந்து அதைத் துரத்த, அது ஓட, கடைசியில் பாட்டி மருத்துவமனை போற நிலைமை வந்துரும்.

ரொக்கா புத்திசாலி. அப்புறம் தைரியமானவள். அவளுடைய வகுப்பில் Emilyன்ற பொண்ணும் அப்புறம் மொத்த Classம் சேர்ந்து, classல இருக்கிற ஒரு பெண்ணை bully பண்ணுவாங்க. Emily அந்தப் பெண்ணைப் பார்க்கும்போதெல்லாம் Bully பண்ணுவாள். ரொக்கா Classல எல்லார்கிட்டயும் சமமாக பழகுவாள். அவள் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கிற தெருவோரம் வாழ்கிற மக்களுக்கு சாப்பாடு, தண்ணீர் கொடுத்து அவங்களோட பேசுவாள்.

BetaCinema

ஒருநாள் Emily School Groundல் இருக்கிற பை தடுக்கி கீழே விழுந்துவிடுவாள். அப்ப எல்லாப் பசங்களும் பார்த்துட்டு, அவளை photo எடுத்து சிரிக்க ஆரம்பிப்பாங்க. ஆனால், ரொக்கா உடனே தன்கிட்ட இருக்கிற medical kit எடுத்து Emilyக்கு மருந்து போடுவாள்.

இந்தப்படம் ஒரு Feel Good Movie.

படைப்பு:

ரித்திகா

ரித்திகா (18.06.2005) வயது பதினாறு, ‘சாவித்ரிபாய் ஃபுலே பெண்கள் பயணக்குழு’ உறுப்பினரான இவர் ட்ரெக்கிங், ட்ராவல் போன்றவற்றில் ஆர்வம் கொண்டவர்.

ரித்திகா தனது ஒன்பதாவது வயதில் கராத்தே (இஷின்ட்ரியு ஸ்டைல்) ப்ளாக் பெல்ட் மற்றும் பதின்மூன்றாவது வயதில் ‘டேக்வொண்டோ’வில் ப்ளாக் பெல்ட் பெற்றுள்ளார். ட்ரம்ஸ் வாசிப்பதில் –லண்டன் ட்ரினிட்டி காலேஜ் நடத்தும் தேர்வில், ஐந்தாம் நிலையில் உள்ளார். பள்ளியில் 10ஆம் வகுப்பு முடித்துள்ளார். 

Exit mobile version