Site icon Her Stories

உடல் மொழியும் உச்சக்கட்டமும்

அமெரிக்க உளவியல் குழுமம் (The American Psychological Association) ‘உடல் மொழி’ (Body language) ஒருவரின் ஆழ்மனதில் புதைந்திருக்கும் உணர்வுகள் மற்றும் ஆசைகளை வார்த்தைகளின் உதவி ஏதுமின்றி ஒருவர் நிற்கும் விதம், உடல் அசைவுகள் மற்றும் முகபாவனைகள் மூலம் வெளிப்படுத்துவதுதான் என்று வரையறுத்திருக்கிறார்கள்

ஒரு பெண்ணின் வெளித்தோற்றம், உடலமைப்பு, ஆடை அணியும் விதம் இவற்றால் ஒரு ஆண் எவ்விதம் ஈர்க்கப்படுகிறான், களவியலில் இவைகளின் பங்கென்ன என்பதைப் பிறகு பார்ப்போம். உடல் மொழி மற்றும் உணர்வுகளைப் பற்றி முதலில் பேசலாம்

பெண்களுக்கு வெட்கம் என்ற உணர்வை உருவாக்கவோ, வெளிப்படுத்தவோ, ஆண்களிடமில்லாத எவ்வித சுரப்பியும் உடலில் இருப்பதாக நிரூபிக்கப்படவில்லைஆனாலும், வெட்கம் என்பது பெண்களுக்கு இருந்தேயாக வேண்டிய ஒரு குணம் போல் இந்த சமூகம் தொடர்ந்து வலியுறுத்தி எதிர்பார்க்கிறது. வெட்கம் ஒரு தனிப்பட்ட நபரின் பிரத்யேகக் குணம். சில ஆண்களும் வெட்கப்படலாம், பல பெண்கள் வெட்கப்படாமலும் இருக்கலாம். அது முழுக்க முழுக்க அவர்களது தனிப்பட்ட உணர்திறனைச் சார்ந்தது (Sensitiveness). 

ஒருவர் வளர்ந்த விதம், அவர் பார்த்து வளர்ந்த நபர்களின் குணாதிசயங்கள், அவரையறியாமல் உணர்வளவில் அவரைக் கவர்ந்த யாரோ ஒருவரின் வெட்கத்தை உள்வாங்கி அதை அப்படியே பிரதிபலித்தல்இப்படி, ஒருவர் ஏன் வெட்கப்படுகிறார் என்பதற்கு ஏகப்பட்ட காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்

பெரும்பாலும் என்றோ ஏதோ ஒரு சூழலில் ஒரு பெண் வெட்கப்பட்டு, அது பார்க்க அழகாயிருந்திருக்கக்கூடும், பிற ஆண்கள் அவளது வெட்கத்தை ரசித்திருக்கக்கூடும். அதை அப்படியே மற்ற பெண்களும் பிரதியெடுத்துப் பின்பற்றியிருக்கலாம். அல்லது பெண்கள் நேரடியாகப் பேசாமல் சில விஷயங்களை வெட்கத்தால் பூசி மழுப்பியது ஆண்களின் ஆதிக்க  மனப்போக்குக்கு வசதியாயிருந்திருக்கலாம்… குறிப்பாக களவியல் சார்ந்த செயல்பாடுகளில்

கூடலின் போது நேரடியாகத் தன் துணையிடம் தங்கள் விருப்பங்களையோ அல்லது அசௌகர்யங்களையோ பெண்கள் வெளிப்படுத்துவதில்லை. அவற்றை மறைமுகமாகத் தங்கள் உடல் மொழியாலும் கண்ணசைவுகளினாலும் வெளிப்படுத்தும் மனப்போக்கைத்தான் இன்றளவும் பெரும்பாலான பெண்கள் பின்பற்றுகிறார்கள்கலவியின் போது ஒரு பெண்ணின் உடல் மொழி எவ்வாறு அமைந்திருக்கிறது என்பதை வைத்து அவள் எவ்விதம் தன் உணர்வுகளை வார்த்தைகளின் உதவியின்றி வெளிப்படுத்துகிறாள் அல்லது மறைமுகமாக தன் துணைவரிடம் என்ன சொல்கிறாள் என்பதை ஆண்கள் புரிந்து கொள்ளலாம்

அவற்றில் ஒரு சிலவற்றைப் பற்றி இப்போது பேசலாம்

1. கலவியின்போது மன அழுத்தம்:

கலவியின் போது ஏதேனும் புற காரணங்களாலோ அசௌகர்யமாய் இருப்பதாலோ, வலியை உணர்வதாலோ, பயத்தைத் தூண்டும் விஷயங்களை நினைத்துக் கொண்டிருப்பதாலோ பெண்களுக்கு மன உளைச்சல் ஏற்படலாம்சில சமயங்களில், மனம் சார்ந்த ஏதோ பிரச்சினைகளால் அவர்கள் அழுத்தமாய் உணரக் கூடும். கூடலின்போது சில பாகங்கள் தொடப்படும் போது தாங்கமுடியாத அளவுக்கும் தொடர்ந்து அத்தொடுகையை அனுமதிக்க முடியாத அளவுக்கும் அதீதக் கூச்சத்தை பெண்கள் எதிர்கொள்வார்கள்அத்தைகைய சூழலிலும் அவர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்குள்ளாக நேரிடலாம்அப்போது அவர்கள் உடலில் கார்டிஸோல் (Cortisol) என்ற ஹார்மோன் சுரக்கும். இந்தக் கலவி நேர மன அழுத்தம் (Stress during sex) பெண்களுக்கு ஏற்படுவதென்பது மிகவும் சாதாரண விஷயம்தான். அநேகமாக, எல்லாப் பெண்களுமே வாழ்க்கையில் ஒருமுறையேனும் இதைக் கடந்துதான் வந்திருப்பார்கள். அதனால், ஒரு வேளை உங்களுக்கு இப்படி நிகழ்ந்தால், ஏதோ உங்களுக்கு மட்டும் தான் இப்படி நடக்கிறது என்று நினைத்து பயப்படாதீர்கள்

உங்கள் மனைவிக்கு உடலுறவின் போது இத்தகைய மன அழுத்தம் ஏற்பட்டால், எப்படியெல்லாம் அவள் அதை வெளிப்படுத்துவாள் என்று பார்க்கலாமா..? அச்சமயத்தில் அவள் தனது உள்ளங்கைகளால் அல்லது தன் புறங்கைகள் மற்றும் முழங்கைகளைப் பயன்படுத்தி ஆணின் மார்பில் அவனது செய்கைகளைத் தடுக்குமாறு, அவன் மேலும் தொடர முடியாதபடி அழுத்துவாள்அப்படி செய்கிறாள் என்றால், ‘எனக்கு வசதியாயில்லை, தயவு செய்து நிறுத்து எனக்குக் கொஞ்சம் என்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள அவகாசம் வேண்டும்…’ என்று அவள் சொல்கிறாள் எனப் புரிந்து கொள்ளுங்கள்

அப்போது, அவளது அதீத உணர்ச்சி மிகுந்த, மிக மென்மையான பாகங்களைத் தொடுவதைக் கொஞ்சம் நிறுத்தி விட்டு அவளின் நெற்றிப் பகுதி, தலைதோள்பட்டை மற்றும் மார்பகங்களின் பக்கவாட்டுப் பகுதி இவைகளை அன்பாய், மெதுவாய் வருடிக் கொடுத்து அவளை சிறிது ஓய்வாக உணர வையுங்கள்இந்த ஒரு சிறிய இடைவெளி அவள் தன்னைத் தானே கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ள உதவும். ஒன்றும் பிரச்சினையில்லை, நீங்கள் இவ்வாறு மென்மையாய் வருடிக் கொடுப்பதால் சில நிமிடங்களிலேயே மகிழ்வுணர்வைத் தூண்டக்கூடிய ‘ஆக்ஸிடோஸின்’ என்ற ஹார்மோன் அவளது உடலில் சுரக்கத் தொடங்கி விடும் என்பதால் உங்கள் உறவை மீண்டும் நீங்கள் இயல்பாய்த் தொடரலாம்

அவ்வாறு தொடரும்போது எடுத்த எடுப்பிலேயே நேரடியாக அவளது பெண்ணுறுப்பைச் (Vagina) சுற்றியுள்ள பாகங்களுக்குச் சென்று விடாமல், மார்பகங்களின் முலைக்காம்பு நுனியை (Nipples) மெதுவாக வருடிக் கொடுங்கள்

2. உங்கள் கண்களை நேரடியாகப் பார்த்தல்: 

உங்கள் கண்களை நேரடியாக அதிகம் சிமிட்டாமல், வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்றாலோ அல்லது தாடைப் பகுதியை ( Chin) லேசாக உயர்த்திக் காட்டுகிறாள் என்றாலோ அந்த உறவில் அவள் ஆதிக்கம் செலுத்த விரும்புகிறாள் என்று பொருள். அதைப் புரிந்துகொண்டு அனுமதியுங்கள்இப்போது அவள் உங்கள் கண்களை உற்றுப் பார்த்தவாறு உங்களது கைகளையோ அல்லது மணிக்கட்டையோ பிடித்தால் நீங்கள் அதற்குக் கட்டுப்படுவது போல் சரணடைந்து விடுங்கள்உங்களுக்கும் அவள் அப்படி தன் கட்டுப்பாட்டிற்குள் கூடலை நகர்த்துவது பிடித்திருக்கிறது என்பது போல் அவளது கண்களை நேராகப் பார்த்தபடி அவளது மார்பின் முலைக் காம்பு பகுதியையும் , பின்னங் கழுத்தையும் வருடிக்கொடுங்கள்இப்படிச் செய்யும் போது ஒருவர் தன்னைப் பாராட்டும் போதும் தன்னை அல்லது தன் செயலை அங்கீகரிக்கும் போதும் சுரக்கும் டோபோமைன் (Dopamine) சுரப்பியும் அதன் கூடவே ஆக்ஸிடோசின் (Oxytocin) மற்றும் PEA எனப்படும் ஃபினைலெத்லைமைன் (Phenylethylamine) ஆகியவையும் மிகுதியாக அவள் உடலில் சுரக்கத் தொடங்கும்

3. ஃபினைலெத்லைமைன் என்பது கலவியல் இன்பத்தை நுகரச் செய்யும் ஒரு நரம்பியக்கடத்தியாகும். நரம்பியக்கடத்திகள் (Neurotransmitters) என்பவை நம் உடலில் இருக்கும் தகவல்களைக் கடத்த உதவும் வேதியியல் தகவல் கடத்திகளாகும். இவற்றின் உதவியில்லாமல் நம் உடல் இயங்க முடியாதுஃபினைலெத்லைமைன்ஆம்ஃபெடமைன்ஸ் (Amphetamines) என்ற வேதிப்பொருளோடு தொடர்புடையது. கூடல் மற்றும் காதல் பொழுதுகளில் அதில் ஈடுபடுபவர்களின் மனநிலைக்குக் காரணமாகிறதுஅதனால்தான் காதலில் திளைத்திருப்பவர்கள் அதீத உற்சாகத்துடனும், துள்ளலுடனும், நம்பிக்கையான மனப்போக்குடனும், கூர்மையான கவன உணர்வுடனுமிருக்கிறார்கள்உடற்பயிற்சி செய்தல், பயணம் செய்தல், வாகனம் ஓட்டுதல் போன்ற உடலியக்க வேலைகளில் காதலர்கள் ஆர்வமுடையவர்களாகக் காணப்படுவதற்கும் காரணம் இதுதான்

ஒருவர் மீது பைத்தியக்காரத்தனமான காதலில் விழுச் செய்வதும் அவர்கள் மீது அளவிற்கதிகமான ஈர்ப்புணர்வை ஏற்படுத்துவதும் நம் உடலில் சுரக்கும் இந்த ஃபினைலெத்லைமைன் (PEA ) செய்யும் வேலைதான் எனவும் அப்போது அவர்கள் மூளை முழுவதும் ஆம்ஃபெடமைன் (Amphetamine) பாய்ந்து பாலியல் உணர்வுகளைத் தூண்டுவதாகவும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்சில சாக்லேட்களிலும் கூட ஃபினைலெத்லைமைன் (PEA) சேர்க்கப்படுகிறது.

காதலர்கள் ஏன் சாக்லேட்களைப் பரிசளித்துக் கொள்கிறார்கள்? அன்பின் அடையாளமாக சாக்லேட்களைப் பகிர்ந்து கொள்வதைப் போல் ஊடகங்களிலும், சாக்லேட் விளம்பரங்களிலும் ஏன் முன்னிலைப் படுத்துகிறார்கள்? காதலின் சின்னமான சாக்லேட்டிற்கும் காதலுக்கும் என்ன தொடர்பு என்று இப்போது புரிகிறதா..? 

4. கூடலின் போதுஉங்களது பின்பகுதியை (Buttocks) அவள் அழுத்திப் பிடிக்கிறாள் என்றால், நீங்கள் செய்வது பிடித்திருக்கிறது, தொடருங்கள் என்று அர்த்தம். பொதுவாக, எடுத்த எடுப்பில் உங்கள் பின் பகுதியை அழுத்தாமல், முதலில் உங்கள் முதுகிலிருந்து ஆரம்பித்து பிறகு உங்கள் இயக்கம் தொடர, தொடர, அவளது கைகளைக் கீழ் நோக்கி வந்து பிறகு, உங்கள் பின் பகுதிக்கு கொண்டு வருவாள்… முதலில் மெதுவாக இருக்கும் அவளது பிடியின் அழுத்தம் போகப் போக அதிகரித்து வலுவாகும். தனது நகங்கள் பதியும் அளவிற்கு அவள் தன் பிடியை உங்கள் மீது இறுக்கினால், இன்னும் நீங்கள் வேகமாக இயங்க வேண்டும் என்றும் அவள் உச்சக் கட்டத்தை அடையப் போகிறாள் என உணர்த்துகிறாள் என்றும் புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள்.

5. நீங்கள் இவ்வாறு அவள் மீது இயங்கிக் கொண்டிருக்கும்போது அவள் உங்களை முத்தமிடத் தொடங்கினால், உங்கள் மீது காமத்தையும் தாண்டி இப்போது அன்பும் காதலும் அவள் மனதிற்குள் ஊற்றெடுக்கிறது என்று அர்த்தம்பெரும்பாலும் காமத்தின் இந்த உன்னத நிலையை மிகச் சில அன்பான தம்பதிகள் மட்டுமே அடைவார்கள். அப்போது சில நேரங்களில் ஊற்றெடுக்கும் இந்த அன்பின் மிகுதியால் அவள் கண்களில் கண்ணீர் வரக்கூடும்அன்பின் உச்சக்கட்டம் காமம்காதலின் நிறைவு காமம்என்பதெல்லாம் எந்தளவிற்கு உண்மையோ, அதே அளவிற்கு சில சமயங்களில் கூடலின் உச்சக்கட்டம் அன்பின் ஆரம்பமாகவும், காமத்தின் நிறைவு, காதலின் தொடக்கமாகவும் அமையக் கூடும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்சொல்லப்போனால் காதலும், காமமும் ஒன்றையொன்றுப் பின்னிப் பிணைந்திருக்கும் ஒரு நூல்கண்டு போலத்தான். ஒன்றின் முடிவில் இன்னொன்று தொடங்கி கண்ணுக்குப் புலப்படாத ஒரு சுற்றுப்பாதை போல் தொடரும். எது முடிவு, எது தொடக்கம் என யாராலும் நிர்ணயிக்க முடியாதுஏன், அவ்வாறு நிகழ்கையில், அந்தக் கணத்தில் உங்களாலேயே உங்களைப் புரிந்து கொள்ள முடியாது

ஏனெனில் காமம் வெறும் உடல் சார்ந்த ஒரு விஷயமாக மட்டுமிருக்கும் வரை அதை ஆராயலாம், புரிந்து கொள்ள முற்படலாம்ஆனால், அது எப்போது மனம் சார்ந்த, உணர்வுகள் சார்ந்த ஒரு விஷயமாக மாறி விடுகிறதோ அந்த கணத்தில், அந்த உணர்வுகளின் அடர்த்தியை, அதன் வீச்சை உள்வாங்கி அனுபவிக்க வேண்டுமே தவிர அதை ஆராயக் கூடாதுநீங்களே நினைத்தாலும் அப்போது அப்படி ஆராய்ந்து கொண்டிருக்க முடியாதுயாருடன் கூடினாலும், எல்லோருக்கும் எல்லோரிடமும் இப்படி நிகழுமா என்றால், நிச்சயமாய் இல்லை. உடல்களால் மட்டுமே இணையாமல், உணர்வுகளாலும் பிணைந்து, இணைந்திருக்கும் தம்பதிகளுக்கு மட்டுமே இது சாத்தியமாகும்

உங்கள் மனைவி கூடலின்போது இவ்வாறு முத்தமிட்டுக் கொண்டே அழுதால், உங்கள் உடலியக்கத்தை நிறுத்தாமல், நீங்களும் அவள் மீது இயங்கிக் கொண்டே மெதுவாக அவளது நெற்றியை, தலையை , தோள்களை வருடிக் கொடுங்கள். பிறகு மெதுவாக அவள் உடல் முழுவதும் முத்தமிடுங்கள்.

இப்படி செய்தால் நீங்கள் அவளது மனதிற்குள் பொங்கியெழும் அன்பைப் புரிந்து கொள்கிறீர்கள், உங்களுக்கும் அவள் மீது அதே போல் அன்பும் காதலும் ஊற்றெடுக்கிறது எனப் பொருள். இப்போது அவளுக்குக் கொடுக்கும் முத்தங்கள் மூலம் நீங்கள் அவள் மீதான அந்த அன்பையும் காதலையும் வெளிப்படுத்துகிறீர்கள் என்றும் அர்த்தம்

நீங்கள் ஒரு வார்த்தை கூடப் பேசத் தேவையில்லை. மேலே குறிப்பிட்டுள்ளபடி நீங்கள் செய்யும் போது, உங்களது அத் தொடுகைகளின் மூலமே அவள் நீங்கள் சொல்ல வருவதைப் புரிந்து கொள்வாள்அடுத்த முறை உங்கள் மனைவியுடன் கூடலில் ஈடுபடும் போது அவளது உடல் மொழிகளை உற்று கவனித்து, அதற்கேற்ப மேற்சொன்னபடி செயல்படுங்கள்

இந்த அத்தியாயத்தில் சொல்லப்பட்டுள்ள ஆலோசனைகள் எந்த அளவுக்கு உங்கள் கலவி நிகழ்வுகளையும், அதன் நீட்சியாக உங்களது தினசரி வாழ்க்கையையும் உங்கள் இருவருக்குமிடையேயான அன்பு மற்றும் புரிதலையும் மேம்படுத்த உதவியது என்பதை எமக்குத் தெரிவியுங்கள்

இவையெல்லாம் ஒருபுறமிருக்கபெண்ணின் உடலைத் தீண்டாமலேயே அவளை உச்சக்கட்டம் அடைய வைக்க முடியும் என்ற உண்மையும் நிரூபிக்கப்பட்டுள்ளது

கலவியில் ஈடுபடும் மிக முக்கியமான உறுப்பு எது தெரியுமா..? ஆண், பெண் அந்தரங்க உறுப்புகள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா..? அதுதான் இல்லை. அந்த முக்கியமான உறுப்பு மூளைதான் என்று ஆய்வுகள் சொல்கின்றன

1. ஒரு பெண்ணைத் தொடாமலேயே அவளை உச்சக்கட்டமடைய வைக்க அவளது மூளையைக் களவியல் தூண்டுதல் செய்வது மிக முக்கியமான ஒரு முறை (Sexually stimulate her mind). தெளிவான, சிறிய நுணுக்கங்கள் கூட விட்டுப் போகாமல் இடம், வாசனை, உடல், பாவனைகள், மொழி என அனைத்தையுமே அவள் கற்பனை செய்து பார்க்கும் படி ஒரு ஆண் விவரித்தாலே அவள் உச்சக்கட்டமடைந்து விடுவாள். ஒரே ஒரு நிபந்தனை என்னவென்றால், சம்பந்தப்பட்ட இருவருமே ஒருவர் மீது ஒருவர் ஆழ்ந்த காதலும், உடல் மற்றும் மன ரீதியிலான ஈர்ப்பும் கொண்டிருக்க வேண்டும்.பெரும்பாலும் தன் துணையைப் பிரிந்து வேறிடத்தில் வாழும் தம்பதிகளும் தொலைதூர உறவில் ஈடுபட்டுள்ளவர்களும் (Distance relationship) இந்த முறையைப் பின்பற்றுகிறார்கள்

2. அடுத்தது, காட்சிகளின் மூலம் தூண்டப்பட்டு (Visual stimulation)  உச்சக்கட்டமடைதல்

ஆண்கள், பெண்கள் இருவருக்குமே தங்களது துணையின் சில உடல் மொழி அசைவுகள், அவர்கள் உடுத்தும் ஆடைகளின் சில வடிவமைப்புக்கள், அவர்களது உடலில் சில குறிப்பிட்ட அங்கங்கள் என அவர்கள் பார்க்கும் சில விஷயங்களால் உச்சமடைதல் நிகழும். பெண்களுக்கு இவ்வித உச்சமடைதலின் சதவிகிதம் ஆண்களை விட அதிகம். சிறிய நுணுக்கங்களைக்கூட பெண்கள் துல்லியமாகக் கவனித்து நினைவில் வைத்திருப்பார்கள். யாரிடமாவது பேசும்போதுகூட தங்கள் சிறு வயது காதலனைப் பற்றி, பல வருடங்களுக்கு முன்பு அவன் செய்த ஏதோ ஒரு செய்கையைஅணிந்திருந்த ஏதோ ஒரு ஆடையை, பேசிய ஏதோ ஒரு வார்த்தையைப் பற்றிக் கூட அங்குலம் அங்குலமாக விவரிப்பார்கள்பெண்களுக்கு இயல்பாகவேஇயற்கை அளித்துள்ள இந்தப் பிரத்யேக மனநிலையினால்தான் தங்கள் துணைவரின் பார்வைத் தூண்டுதலாலேயே அவர்களால் எளிதாக உச்சக்கட்டம் அடைய முடிகிறது

3. அடுத்தது, நினைவுபடுத்திப் பார்த்து அல்லது தொடர்புபடுத்திப் பார்த்து உச்சமடைதல்: ( Orgasm through Remembering and Relating things)

தங்களுக்கு ஏற்கெனவே நிகழ்ந்த உச்சக்கட்ட அனுபவங்களை நினைத்துப் பார்க்கும் போதும் திரைப்படங்களிலோ அல்லது புத்தகங்களில் ஒரு கலவியல் காட்சி விவரிக்கப் படும் போது அவற்றோடு தங்களைத் தொடர்பு படுத்திப் பார்க்கும் போதும் பெண்களுக்கு உச்சக்கட்டம் ஏற்படுகிறது

4. சில ஆண்களுக்கும், பெண்களுக்கும் எதிர்பாலரின் அங்க வடிவமைப்புக்களைப் போன்ற பொம்மைகளையோபொருள்களையோ பார்க்கும்போதுகூட உச்சக்கட்டம் நிகழ்கிறது

5. ரேச்சல் ஸார் (Rachel Zar) என்ற பாலியல் நிபுணர், சில வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் தலையணை போன்ற மெத்தென்ற பொருள்கள் அவர்கள் மேல் உரசும்போதும் அழுத்தமான விசையுடன் தண்ணீர் அவர்களது அந்தரங்க பாகங்களில்படும்போதும் உச்சக்கட்டம் நிகழ்வதாகப் பதிவு செய்திருக்கிறார்

சிலருக்கு குறிப்பிட்ட மணம், பூக்களின் வாசம் அல்லது நறுமண திரவியங்களின் வாசனை இவை கூட உச்சக்கட்டத்தை ஏற்படுத்துகிறதாம். காரணம், எப்போதோ கூடலின்போது அவர்கள் இந்த நறுமணங்களை நுகர்ந்திருக்கலாம். அல்லது, அவர்கள் பார்த்த திரைக்காட்சிகளில் மேற்சொன்ன விஷயங்கள் கலவியோடு இணைத்துக் காட்டப்பட்டிருக்கலாம். சிலரது குடும்பங்களில் யாருக்காவது முதலிரவு நடக்கும் போது இப்பொருள்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதை அவர்கள் நேரடியாகப் பார்த்திருக்கலாம்வேறு யாராவது இப்பொருள்கள் மற்றும் நறுமணத்தையும் காமத்தையும் இணைத்துப் பேசியதை இவர்கள் கேட்டிருக்கலாம். இவற்றையெல்லாம் பதிவு செய்து கொண்ட அவர்களின் மூளை, எப்போதெல்லம் அவர்கள் சில குறிப்பிட்டக் காட்சிகளைப் பார்க்கிறார்களோ, சில பிரத்யேக வாசனைகளை நுகர்கிறார்களோ அப்போதெல்லம் அவர்களை உச்சக்கட்டமடைய வைக்கிறது

எதிர்பாலினரின் தொடுதல் இல்லாமலேயே இப்படி பல விதங்களில் உணர்வுகள் தூண்டப்பட்டு உச்சக்கட்டமடைவது காலங்காலமாக நிகழ்ந்து கொண்டேதானிருக்கிறது

இப்போது சொல்லுங்கள்உச்சக்கட்டம் உடலுக்கா..? உணர்வுகளுக்கா..?

தொடர்ந்து பேசுவோம்…

படைப்பு:

செலின் ராய்

காட்சித்தகவலியல் (Visual communication) துறையில் இளங்கலையும்இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் (Mass communication & Journalism) உளவியல் (Psychology) இவையிரண்டிலும் முதுகலைப் பட்டமும் அழகியலில் (Advance Diploma in Beautician) அட்வான்ஸ்டு டிப்ளமோ பட்டமும் பெற்றவர்விரிவுரையாளருக்கான தேர்வில் தேர்ச்சி பெற்று (UGC – NET) பல கல்லூரிகளில் துறைத்தலைவராகப் பணியாற்றியவர்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு விடுமுறையில் எழுதத் தொடங்கிதமிழில் பல முன்னணி இதழ்களில் எழுதியவர். புத்தகங்கள், மொழிபெயர்ப்பு நூல்கள் எழுதியுள்ளார். பிரபல பெண்கள் பத்திரிக்கைக்கு 21 வயதிலேயே ஆசிரியரான போது, ‘ The Youngest Editor of Tamilnadu’ என ‘The Hindu’ பத்திரிக்கை செய்தி வெளியிட்டது53 ஆடியோ மற்றும் வீடியோ சிடிக்களை பல தலைப்புகளிலும் வெளிட்டுள்ள இவர் எழுதுவதுடன் உறவுச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான பல பயிலரங்குகளை தமிழகமெங்கும் நடத்தி வருகிறார்இவருக்கு மனித உரிமைக் கழகம் மனித நேயத்துக்கான விருது வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version