“தன் பொம்மைகளுடன் ஒளிந்து விளையாடினாள்
பெரியவர்களின் உலகத்தை ஒத்ததொரு விளையாட்டு
கிச்சன் செட், பார்பி பொம்மை என்று…
சிலசமயம் பெரியவர் யாராவது அவளுடன் விளையாட வந்தார்கள்
‘நான் உன் அப்பா போல’ என்று அக்கறை காட்டுவது போல் ஒருவர்
தனக்கு அச்சமூட்டும் விளையாட்டை அவர் விளையாடமாட்டார் என்று நம்பினாள் குழந்தை
ஆனால் அவர்கள் மாறவேயில்லை என்பது குழந்தைக்குத் தெரியவில்லை
குழம்பினாள்; இது முடிவுக்கு வரவேண்டும் என்று தவித்தாள்
எல்லோரும் விளையாடும் ஒரு விளையாட்டுதானிது என்றார் அவர்
புரிதலோ உரிமையோ இல்லாத குழந்தை
அவனது முறையற்ற கற்பனைகளுக்கு இரையானாள்.
வளர்ந்து மறந்து போவாளென நினைத்தான் அவன்
அவள் உடல் ஆறியது;
நினைவுகள் கலைந்தன;
அவள் உள்ளுக்குள் எப்போதும் அவளாகவே இருப்பாள்
குழம்பிய, அச்சமுற்ற இறைஞ்சும் சிறுமியாக..
அவளை ‘பயன்படுத்தியவர்கள்’ செத்துப் போனார்கள்
அவளோ கண்ணுக்குப் புலப்படாத எரியும் புண்களுடன் இருக்கிறாள்
கோபமும், வருத்தமும் துடிக்கும் உடல் மூலமாய்
தன்னை ஏற்றுக்கொள்ள இயலாமல்,
மன்னிக்கவோ மறக்கவோ முடியாமல்,
இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும்
அவளிதயத்தில் வடு உண்டு, இதை ஊழிமட்டும் அவள் சுமப்பாள்.”
- சங்கீதா பிரியா
- மொழியாக்கம்: நிவேதிதா லூயிஸ்
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குறித்து சங்கீதா பிரியா எழுதிய கவிதை இது.
ஆங்கில மூலம்:
சங்கீதா பிரியா
ஆசிரியர்; கட்டிட வடிவமைப்பாளர். ஃபிஃப்த் எலிமன்ட் ஆர்கிடெக்சர் ஸ்டுடியோ நிறுவனத்தின் கூட்டாளர். இன்ஸ்டாகிராம் மூலம் தன் நண்பர்கள், மாணவிகள் மற்றும் பிறருடன் தொடர்பில் இருக்கிறார். ஓவியம், லெட்டரிங், கவிதைகள், படங்கள் மூலம் பெண்ணிய சிந்தனைகளை உரக்கப் பேசிவருகிறார். அவரது டிஜிட்டல் ஸ்கெட்சுகள்:
***