சுயம் (எனக்கே எனக்காக)

ஆண்கள் எல்லாருமே அப்படியா என்றால், எல்லாவிஷயங்களிலும் சில விதிவிலக்குகள் உண்டு என்பது நாம் மறுக்க முடியாத உண்மை.
அளவுக்கு மீறின அடிமை வாழ்வு கசந்து போகும் போது, வெளியேற நினைக்கும் பெண்களை பெரும்பாலும் ஆண்கள் கட்டுப்படுத்த நினைப்பது பிள்ளை எனும் அங்குசத்தைக் கொண்டு மட்டும்தான். பிள்ளைகளுக்காகவே தன் சுயத்தைத்தொலைத்து வாழும் பெண்கள் இங்கே எத்தனையோ. கோயில் யானைகள் போல, தன் பலம் அறியாமல் கட்டுண்டு கிடக்கும் பெண்களை கணக்கில் அடக்க முடியுமா?