UNLEASH THE UNTOLD

அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்த முதல் பெண்!

பதவிகளும் சொகுசான வாழ்க்கையும் வசதியும் தேடி வந்தாலும் விமானத்தில் உலகைச் சுற்றிவர வேண்டும் என்கிற மாபெரும் வேட்கையைக் கொண்டவராக இருந்தார் அமெலியா. அவருக்கு முன் வேறு பலர் இந்தச் சாதனையைச் செய்திருந்தாலும் தனக்கென புதிய இலக்கொன்றை வைத்திருந்தார். தன் பயணத்துக்காகப் பூமத்திய ரேகையை ஒட்டி அமைத்துக்கொண்ட பாதை, அதுவரை மற்றவர்கள் தேர்ந்தெடுத்த பாதையைவிட அதிக தூரத்தைக் கொண்டது. ஏறக்குறைய 47 ஆயிரம் கி.மீ. வான்வழிப் பயணம் செய்யவேண்டும். பர்டியூ பல்கலைக்கழகத்தின் பொருளுதவியுடன் அவருடைய பயன்பாடுக்கேற்ற வகையில் விமானத்தை வடிவமைத்தது லாக்ஹீட் வானூர்தி நிறுவனம்.

கல்வியே சமநிலையை உருவாக்கும்!

அறிவாற்றலால் தன்னை உறுதிப்படுத்திக்கொள்ளும் ஒருவரை வெல்லும் சக்தி வேறெதற்கும் இல்லை. ஆக, ஒரு பெண்ணிற்குக் கிடைக்கும் கல்வி என்பது அவளது எதிர்காலத்தை கட்டமைப்பதோடு, ஆரோக்கியமான சமுதாய மறுமலர்ச்சிக்கும் வழிவகுக்கும்.

தடைகளைத் தாண்டிய பயணம்!

ஜான் எஃப் கென்னடி விமான நிலையத்தில் ரமாதேவியின் பெட்டி தீவிர சோதனைக்கு உள்ளாக்கப்பட்டதை, “ஒரு வாரமாகப் பார்த்துப் பார்த்து அடுக்கி வைத்த சூட்கேஸ் மாடு புகுந்த கம்பங்கொல்லை ஆனது” என்று குறிப்பிடுகிறார். இந்த மொழி நடை, கையாண்ட ஒப்புமைகள் எல்லாம் வாசகர்களுக்கு ரமாதேவி என்கிற பெண்ணின் அபார தன்னம்பிக்கையின் வெளிப்பாடாக இருக்கிறது. எல்லா அனுபவங்களையும்தான் தனக்கு நியமித்து கொண்ட விதிகளின் வழியே (in her own terms) தைரியமாகப் பார்க்கும் ஒரு சாதனைப் பெண்ணாக மலர்கிறார் எழுத்தாளர்.

சினிமாவுக்கு வாரீகளா?

பல திரைப்படங்களில் கதை மிக கோர்வையாக இருக்கிறது. சில திரைப்படங்களில் கதைக்கு ஒட்டாமல் சில நகைச்சுவைக் காட்சிகள், பாடல்கள் இருக்கின்றன என்றாலும் அவற்றில் மக்களுக்கு ஒரு தகவல் கொடுக்கும் விதமாக வைத்திருக்கிறார்கள். சில திரைப்படங்கள் இப்போதும் பார்த்து வியக்கும்படிதான் உள்ளன. நாயகர் ஒருவரே ஊரையே அடித்து வெல்வது போன்ற காட்சிகள் எல்லாம் மிகவும் குறைவு. அதனால் யதார்த்தமாக இருக்கின்றன. பெரும்பாலும் திரைப்படங்களில் நாயகியின் பெயரைத்தான் முதலில் போடுகிறார்கள். பெண் பாத்திரங்கள் மிக வலுவாக உள்ளன. சும்மா மரத்தைச் சுற்றி ஆடுவதாக இல்லை என்பதெல்லாம் எனக்குப் பெரும் வியப்பை ஏற்படுத்தின. முடிந்தால் நீங்களும் பாருங்கள்.

குழந்தை பெற்றுக்கொள்ளும் முன்...

என் அம்மா பார்த்துக்கொள்வார், மாமியார் பார்த்துக் கொள்வார், உறவினர்கள் இருக்கிறார்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று பிறரை நம்பி குழந்தை பெற்றுக்கொள்வதும் கூட அபத்தம்தான். அவர்கள் குழந்தை வளர்ப்பில் துணை புரியலாமே தவிர, முழுப் பொறுப்பையும் ஏற்க முடியாது, கணவன், மனைவி இருவரும் குழந்தை வளர்ப்புக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொண்டு, விட்டுக் கொடுக்க வேண்டியவை பற்றித் தீர ஆலோசித்து, அதன் பின் குழந்தை பெற்றுக்கொள்வது பற்றி யோசித்தாலே குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே பிரச்னை இருக்காது.

லஞ்ச் டைம்

“ஹய்யய்யோ இந்த வெயில்லயா? இன்னிக்குச் சும்மா ட்ரை பண்ணேன். நான் ஒரு மாசமாச்சும் வெளில நல்ல சாப்பாடு சாப்டலாம்னு பார்த்தா, ராம் வத்தக்குழம்பு, பருப்புப் பொடி, மாவுன்னு ஒரு பெரிய லிஸ்டே ரெடி பண்ணி ஃப்ரிஜ்ல வெச்சிட்டுப் போயிருக்கான். அதைத்தான் சாப்டணும்னு. எங்க இருந்தாலும் டார்ச்சர் பண்றாங்கப்பா” என்று தோளைக் குலுக்கினாள் ஜெனி.

வாங்க, சுய மதிப்பீடு செய்வோம்!

தன் மீது மதிப்பும் தன்னம்பிக்கையும் உள்ள ஒருவர் உலகத்தை அநாயாசமாக கவர்கிறார். அவரிடம் அறிவு, அழகு, கல்வி, செல்வம், ஆற்றல் எல்லாம் நிறைந்திருக்க வேண்டுமென எந்த நிர்பந்தமும் இல்லை. ஆனாலும் நமக்கு அவரைப் பார்த்தவுடன் பிடித்துப் போகும். ஏன்?

விவாகரத்து நாள் வாழ்த்துகள்!

சமீபத்தில் (2022) இந்தியக் குடும்பங்களில் ‘நேஷனல் ஃபேமிலி ஹெல்த் சர்வே (NFHS)’ நடத்திய பெரிய அளவிலான பல சுற்றுக் கணக்கெடுப்பில் ‘திருமணமான 18 – 49 வயதுடைய 29.3% இந்தியப் பெண்கள் குடும்ப வன்முறை அல்லது பாலியல் வன்முறையை எதிர்கொண்டுள்ளனர். 18 – 49 வயதுக்குட்பட்ட கர்ப்பிணிப் பெண்களில் 3.1% பேர் அவர்களின் கர்ப்ப காலத்தில் உடல் ரீதியான வன்முறையை அனுபவித்திருக்கிறார்கள். உடல் ரீதியாக வன்முறைக்கு உட்படுத்தப்பட்டும்கூடப் பெரும்பான்மையான பெண்கள் தங்கள் திருமண உறவில் இருந்து விவாகரத்து பெறுவது குறித்துச் சிந்திக்காமல் இருக்கக் காரணம் என்ன?

மலக்குழி மரணங்கள்...

கடந்த 2022 ஆம் வருடம் ஜூலை மாதம் 19 ஆம் தேதி மழைக்கால கூட்டத் தொடரின் போது மலக்குழி சுத்தம் செய்பவர்களுக்கு நிகழும் மரணங்கள் குறித்து பாராளுமன்றத்தில் கேள்வி வைக்கப்பட்ட போது மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் வீரேந்திர குமார், ‘கடந்த  5 ஆண்டுகளில்  இந்தியா முழுவதும் 347 மலக்குழி மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 51, தமிழ்நாட்டில் 48, டெல்லியில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரபிரதேசம், தமிழ்நாடு, டெல்லி ஆகிய 3 மாநிலங்களில் மட்டுமே 40 சதவீத மலக்குழி மரணங்கள் நிகழ்ந்துள்ளன என்கிற புள்ளிவிவரத்தைத் தெரிவித்திருக்கிறார்.

நெய்தல் பெண்களின் வாழ்க்கை

தமிழ்நாட்டில் பல மீன்பிடித் துறைமுகங்களில் போதுமான கழிப்பறை வசதி இல்லை என்று பெண்கள் என்னிடம் வருத்தத்துடன் தெரிவித்திருக்கிறார்கள். “அதிகாலையில் இருந்து இங்குதான் இருக்கிறோம், எப்படிச் சமாளிப்பது?” என்று நாகப்பட்டினத்தில் ஒரு பெண் கேட்டது இன்னமும் நினைவிருக்கிறது. பல பொதுப் போக்குவரத்துகளில் மீன்கூடைகளோடு வரும் பெண்களை நடத்துநர்கள் அனுமதிப்பதில்லை. ஆகவே பெண்கள் தங்களுக்கான வாகன வசதிகளை ஏற்படுத்திக்கொள்ளவேண்டியிருக்கிறது. ஆண்களைக் கைகாட்டி,”அவங்கள மாதிரி டூ வீலர்ல நம்மால போக முடியாது, அப்போ என்னதான் செய்யுறது?” என்று என்னிடம் ஒரு மீன் விற்பனை செய்யும் பெண் கேட்டார். இந்தியாவில் பல துறைமுகங்களில் இதே நிலைமைதான் இருக்கிறது.